NewsBlog

Monday, December 10, 2012

'தென்றல் புயலாகும்!' - பகுதி 1



"நெடுங்காலம் அற வாழுவாய் பாண்டி நாட்டில்  நீதி கொன்ற நீ தானோ மன்னன்?" - என்று கடுங்கோபக் கனல் பறக்க சிலம்பின் செம்மகள் கற்பரசி கண்ணகி பாண்டிய அரசவையில் வழக்குரைத்தாள்.

"... மணி கண்டு..
தாழ்ந்த குடையன்,
தளர்ந்த செங்கோலன்,
பொன் செய் கொல்லன்,
தன் சொல் கேட்ட..
யானோ அரசன்?
யானே கள்வன்!"


"... கெடுக என் ஆயுள்.." - என பாண்டியன் நெடுஞ்செழியன் மனித உரிமை மீறலுக்கு தன்னுயிர் துறக்கக் காரணமாக இருந்தவள்..

"..... கொடுங்கோலை எதிர்த்தகற்றும் திறமும் கொண்ட பெண்டினத்தின் வழிவந்தோம் நாங்கள்!" - என்று சிலம்பின் மூலம் நிரூபித்துக் காட்டி பெண்ணிணத்திற்கு சிறப்புச் சேர்த்தவள் ஒரு தமிழ் பெண்.

அதேபோல, 'குபுக்' கென பற்றிடும் நெருப்பாய் .. எந்நேரமும் வெடிக்க இருக்கும் கோப எரிமலை செங்கிஸ்கான் குலத்தில் உதித்த தைமூரிடம் நீதிக் கேட்டு வழக்குரைத்த அந்த துருக்கிப் பெண்ணின் அசாத்திய மன உறுதியை என்னவென்பது?

தைமூர் ஓரளவு நேர்மையும், பொறுப்பும் வாய்ந்த ஆட்சியாளனாக இருந்தாலும், செங்கிஸ்கானைவிட கொடுங்கோன்மையில் சற்றும் குறைந்தவனில்லை!

கண்ணகி வாதிட்டது.. தன் கணவன் கோவலனுக்காக! இந்த துருக்கிப் பெண் சினந்து நின்றதோ தன் தாய் நாட்டிற்காகவும், தன் குடிமக்களுக்காகவும். இவள் நாணமுள்ள நங்கையாக இருந்த அதேநேரம், பெரும் தைரியசாலியாகவும், துணிச்சல் மிக்கவளாகவும் இருந்தாள். போர்ப் பயிற்சிகளில் நிகரற்ற திறமைப் பெற்றவள்!

- புயல் வீசும்


0 comments:

Post a Comment