NewsBlog

Sunday, October 28, 2012

மாலாலாவை சுட்டது யார்?

அக்டோபர் 7, பாகிஸ்தானின் தஹ்ரிகே இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் 'வஜிரிஸ்தான்' பகுதியில் நடத்திய அமைதிப் பேரணி உலக மக்களின் நிச்சயம் கவர்ந்திருக்கும்.

தாலிபான்களைச் சாக்கிட்டு பாகிஸ்தான் எல்லைப்புறங்களில் பழங்குடியினர் வசிப்பிடங்களில் அமெரிக்க நடத்திவரும் வான்தாக்குதல்களைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணி அது.

இம்ரான் கான் சிலநேரங்களில் 'தாலிபான் கானாக' நடந்து கொண்டாலும், அரசாங்கமும், மற்றைய எதிர்ககட்சிகளும் செய்யத் தவறிய கடமையை தெளிவான முறையில் உலகிற்கு உணர்த்தினார் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பேரணியில் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த போருக்கு எதிரான அமைப்பினர் கலந்து கொண்டனர் என்பது முக்கியமானது.

அமெரிக்கக் குழுவுக்குத் தலைமைத் தாங்கிய 'மீடியா பெஞ்சமின்' பேரணியில் பேசினார். அப்போது அவர், அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கைகளில் சிக்கிக் கொண்டு அவதியுறும் பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இந்த பேரணி நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது அக்.9 - ஆம் தேதி மாலாலா யூஸீப் .. 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சொந்த தயாரிப்பான ' CLASS DISMISSED' இன் முக்கியக் கதாப்பாத்திரம்.. பள்ளிக்கூடத்திலிருந்து அடையாளம் தெரியாத சிலரால் சுடப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த நொடியில் பாகிஸ்தானின் ஊடகங்கள் தாக்குதலை நடத்தியது தாலிபான்கள்தான் என்று ஒத்தக் குரலில் முழங்கினார்கள்.

அமெரிக்காவின் நல்ல சேவகன், ஜர்தாரி அரசாங்கம் தாலிபான் எதிர்ப்பு என்ற கூக்குரலில் தாலிபான்களுக்கு எதிரான ஒரு கூட்டத்தை உருவாக்கிக் காட்டி தனது பவ்வியமான அடிமைத்தனத்தை அதன் மூலம் அமெரிக்காவுக்குக் காட்ட நினைத்தது.

பாகிஸ்தானுக்கான அமெரிக்க செய்தித் தொடர்பாளர் 'விக்டோரியா நுலண்ட்' மாலாலா சுடப்பட்ட பிறகு பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க அரசு மக்கள் கருத்தைத் திரட்ட முனைப்புக் காட்டுவதாக கருத்துத் தெரிவித்தார். அதேநேரத்தில், "பாகிஸ்தானின் எல்லைப்புறங்களில் அமெரிக்க குண்டு வீச்சுகள் சம்பந்தமாகவும்.. அங்கு அப்பாவிகள் கொல்லப்படுவது சம்பந்தமாகவும் இம்ரான் கான் எழுப்பிய கேள்விக்கு மட்டும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பாகிஸ்தானில், அத்துமீறிய அமெரிக்க குண்டுவீச்சுகளில் நூற்றுக்கணக்கான பெயர் தெரியாத மாலாலாக்கள் கொல்லப்படுவதைக் கண்டிக்க திலாணியற்ற பாகிஸ்தான் ஊடகங்கள்.. மாலாலா விஷயத்தில் காட்டும் அக்கறைக்கு வியப்புத் தெரிவித்திருக்கிறார்கள் அறிவுஜீவிகள்.

ஜமாஅத்தே உலமாகவின் தலைவரான மௌலான பஸ்லுல் ரஹ்மான், "மாலாலா மீது நடத்தப்பட்டத் தாக்குதலைக் கண்டித்த கையோடு பாகிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படாதது ஏன்"- என்று கேள்வி எழுப்பினார்.

"மாலாலா தாக்கப்பட்டது மட்டும் பெரிது படுத்திப் பார்ப்பதேன்? இது அமெரிக்காவின் தவறான வெளிவிவகாரக் கொள்கையின் வெளிப்பாடு!"- என்றார்.

"பாகிஸ்தானின் அப்பாவி மக்களைக் கொன்ற கறைப்படித்த கையுக்குரியவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட மலாலாவின் தாக்குதலைக் கண்டிக்கிறார்கள்.

இந்தக் கண்டனங்கள் அமெரிக்க ஆதரவு மனப்பான்மையை தெரிவிக்கிறது. கண்மூடித்தனமாக அமெரிக்காவுக்கு ஆதரவு தருவதிலிருந்து விலகி இருக்க வேண்டும்"- என்று மௌலான குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான ஜமாஅத்தே இஸ்லாமி கட்சியின் தலைவர் சையத் முனவ்வர் ஹஸன் கூறும்போது, "மாலாலாவின் தாக்குதல்களுக்குப் பின்னிருந்த அதே அதிகாரம்தான் வடக்கு வஜீரஸ்தானில் ராணுவ நடவடிக்கைக்குத் தூண்டுதலாகவும், காரணமாகவும் உள்ளது!" - என்றார். லாகூரின் மன்ஸீரா மசூதியில் வெள்ளிக்கிழமை குத்பா உரை நிகழ்த்தும்போது அவர் இதை குறிப்பிட்டார்.

"சுவாத் பகுதியில் இராணுவ நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் ஒளிப்பேழையை மாலாலாவின் சம்பவத்தோடு பொருத்தி போலியான படம் தயாதித்துள்ளதாக!"- அவர் குற்றம் சாட்டினார்.

மாலாலாவின் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த சையத் முனவ்வர் ஹஸன், "பாகிஸ்தானின் எல்லைபுறங்களில் அமெரிக்க வான்தாக்குதல்களால் கொல்லப்படும் நூற்றுக்கணக்கான அப்பாவிகளுக்கு இதைவிட அதிகளவு ஆதரவு தெரிவிக்க வேண்டும்!" - என்றார். "இதையெல்லாம் ஊடகங்கள் கண்டுக் கொள்ளாதது ஏன்?"- என்று கேள்வியும் எழுப்பினார்.

"சுவாத் பகுதியின் பெரும்பான்மையான கல்வி நிலையங்கள் ஊரடங்கு உத்திரவின்போது, அமெரிக்க வான்தாக்குதல்களுக்கு ஆளாகி தரைமட்டமானதையும், இதற்கும் தாலிபான்களைக் காரணம் காட்டி பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் பேசுவதையும்!"- அவர் குறிப்பிட்டார்.

"அமெரிக்க அஜெண்டாபடி பாகிஸ்தான் செயல்பட்டால் அது ஒருகாலும் முன்னேற முடியாது!" - என்றார் சையத் முனவ்வர் ஹஸன்.

"இம்ரான் கான் வஜீரிஸ்தானில் நடத்திய அமைதி பேரணிக்கும் மாலாலா சம்பவத்துக்கும் நிச்சயம் தொடர்புண்டு!" - என்கிறது 'லாகூர் டைம்ஸ்'.

அமெரிக்கத் தயாரிப்பான ஆவணப்படத்தில் நடிக்கும்போது, மாலாலாவுக்கு வயது வெறும் 11. ஆனால், அவர் தனது வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் படத்தில் தோன்றி நடிக்கிறார். இந்த ஆவணப்படம், 'நியூயார்க் டைம்ஸ்' இணையத்தளத்திலும், 'யூடியுபிலும்' காணக் கிடைக்கிறது. இதில் மாலாலா தாலிபான்களின் கடும் எதிர்ப்பாளராகவே படம் முழுக்கக் காட்டப்படுகிறார்.

2011-இல், மாலாலா சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசுக்காக நியமிக்கப்படுகிறார். அன்றைய பாகிஸ்தான் பிரதமர் (படம்) யூஸீஃப் ராஜா ஜீலானி அமைதிக்கான தேசிய அளவிலான விருதொன்றை வழங்கி சிறப்பிக்கிறார். அண்மையில், சிறுவர் உரிமைகளுக்கான போராளியாக யூனிசெஃப் விருதையும் அவர் பெற்றார்.

இளம் பெண் மாலாலா சுடப்பட்டது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவர் பரிபூரணமாக நலம் பெற வேண்டும் என்று எல்லா தரப்பினரும் இறைஞ்சுதல் வேண்டும். அதேபோல, மாலாலா போன்ற அனைத்துப் பெண்களும் நவீன கல்வி கற்பதில் எவ்வித தவறுமில்லை.

ஆனால், மாலாலா தாக்கப்பட்டதையே சாக்காகக் கொண்டு இஸ்லாமும், இஸ்லாமியக் கொள்கைகளும் தாக்கப்படுவது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய ஊடகங்கள் உட்பட சர்வதேச ஊடகங்களின் இலக்கு தற்போது இந்த தாக்குதல்தான்!

தாலிபான்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள். பெண்கள் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்க வேண்டியவர்கள் என்பதெல்லாம் ஆதாரமற்ற பொய்ப் பிரச்சாரங்கள்.

14 வயது மாலாலா பெண் விடுதலைக்கான உலகளாவிய இலச்சினையாகக் காட்டப்படுகிறார். முஸ்லிம் பெண்களின் சமூக முன்னேற்றத்துக்கான போராளியாக அடையாளப்படுத்தப்படுகிறார். இதன் மூலமாக மேற்கத்தியவாதிகள் பயன்படுத்தும் சொல்லான 'முஸ்லிம் பழமைவாதிகளுக்கு' எதிராக மாலாலா மேற்கத்திய சிந்தனையாளர்களால் முன் நிறுத்தப்படுகிறார். அவர் பாகிஸ்தானின் தேசிய பரிசாகவும் பாவிக்கப்படுகிறார்.

இந்தப் பின்னணியில் சில கேள்விகள் எழுவதை யாராலும் தடுக்க முடியாது. அந்தக் கேள்விகள் இவைதான்:

1) உண்மையிலேயே மாலாலா தாலிபான்களால் தாக்கப்பட்டாரா? அதற்கான ஆதாரம் என்ன?

தாலிபான்களின் சாயலில் பெரும்பாலும் பாகிஸ்தானில் உலாவரும் அமைப்புகள் அமெரிக்க உளவு அமைப்பான 'சிஐஏ', இஸ்ரேலிய உளவு அமைப்பான 'மொஸாத்தின்' வடிவங்கள்.

2)உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள், பாகிஸ்தானின் எல்லைப்புறங்களில் அமெரிக்க வான்தாக்குதல்களுக்குப் பலியாகி கொல்லப்படும் நூற்றுக்கணக்கான அப்பாவி, ஏழை மாலாலாக்கள் குறித்து செய்திகள் வெளியிட ஏன் மறுக்கின்றன?

ஒரு இளம் பெண் மாலாலா தாக்கப்பட்டதற்கு ஒரு நாட்டின் அரசாங்கமே உருவாக்கும் பரபரப்புகள், சர்வதேச ஆரவாரங்கள் அமெரிக்க குண்டு வீச்சில் கொல்லப்படும் அப்பாவிகள் விஷயத்தில் காட்டப்படுவதில்லையே ஏன்?

3)தாலிபான்கள் என்ற பெயரை முன்னிறுத்தி முஸ்லிம் அமைப்புகளை, ஊடகங்கள் இஸ்லாத்துக்கு எதிராகத் தாக்குதல்கள் தொடுப்பது ஏன்?

ஆனால், உண்மையில், இளம் பெண் மாலாலா தாக்கப்பட்டதும், இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரமாக அதை திசைத்திருப்புவதும், வஜீரஸ்தான் மீதான தாக்குதல்களை மறக்கடிக்கவே... அந்தப் பிரச்சினையிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைத் திருப்பவே என்கின்றனர் பாகிஸ்தான் நாட்டின் மிக முக்கிய தலைவர் காஸி உசேன் அஹமதுவும், இம்ரான் கானும்!

(ஆதாரம்: தஃவத் (22.10.2012) மற்றும் www.opednews.com)

3 comments:

  1. அமெரிக்காவின் சூழ்ச்சியைத்தானே இன்று உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது,பெரும்பாளான நாடுகளுக்கு அமெரிக்கா செய்வது தவறு என்று தெரிகிறது,ஆனால் அதை வெளியில் சொல்ல திரானியற்றவர்களாக இருக்கிறார்கள்,மொத்தத்தில் வலியவனே வெல்வான் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இன்று உலகில் வலிமையோடு இருக்கும் அமெரிக்க நினைத்ததை நடத்துகிறது...

    ReplyDelete
  2. அமெரிக்க பயங்கர வாதம் இந்த உலகதிற்கான அழிவு

    ReplyDelete
  3. ஊடக பயங்கரவாதமும் அரச பயங்கரவாதமும் ஒன்றிணைந்து தற்போது உலகையே பயமுறுத்தி வருகின்றன.....

    ReplyDelete