தாஃவத் உருது வாரமிருறை பத்திரிகையின் 'செய்தி கண்ணோட்டம்' - என்ற
தலைப்பில் வெளியான 'நேரடி மொழிபெயர்ப்பு - 'அந்த மரணம் குறித்த வருத்தம்
ஏன்?' என்பதை முழு தலையங்கத்தையும் உள்வாங்கி படிக்கும் போது மறைந்த
முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனன் ஜீ யின் மரணம் படிபபோர் எல்லோரையும்
உண்மையில் மனம் கனக்க வைக்கும்.
செப்டம்பர் 20-22, 2012 இல் வெளியான இந்தத் தலையங்கத்துக்கு முன் தாஃவத்
பத்திரிகையில் அதன் முதுநிலை ஆசிரியர் பர்வேஸ் ரஹ்மானி 29 ஆகஸ்ட் - 01
செப்.2012 இல், இதே தலைவரைக் குறித்து ஒரு தலையங்கம் தீட்டியது
குறிப்பிடத்தக்கது. அந்தத் தலையங்கத்தின் தலைப்பு 'சுதர்ஸன் அவர் நமாஸ்
ஈத்' (சுதர்ஸனனும் பெருநாள் தொழுகையும்).
இந்த தலையங்கங்கள்
இரண்டுமே இறைவனின் திருச் செய்தியை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாமலேயே
ஒரு ஆத்மா தன் இறைவனை அடைந்தது குறித்து பெரும் கவலையிலானது.
அழைப்பாளனின் கனத்து பெருமூச்சும், புடைத்து விம்மும் இதயமுமாய் எழுத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.
சுருக்கமாக, வாசகர் மத்தியில் தாஃவத் என்றழைக்கப்படும் 'ஷெஹ்ரோஸா தாஃவத்',
1953 இல் ஆரம்பிக்கப்பட்ட நீண்ட நெடிய பாராம்பர்யம் கொண்டது.
இந்தியா முழவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்களைக்
கொண்ட பத்திரிகை. ஆண்டு தோறும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவது
குறிப்பிடத்தக்கது.
நடுநிலையான, நேர்மையான, ஒளிவுமறைவற்ற விமர்சனங்களால் நடுத்தர மக்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், இஸ்லாமிய பேரறிஞர்கள் என்று பலதரப்பட்ட வாசகர்களைக் கொண்ட இந்தியாவின் முக்கிய வாரமிருமுறை ஏடு.
நடுநிலையான, நேர்மையான, ஒளிவுமறைவற்ற விமர்சனங்களால் நடுத்தர மக்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், இஸ்லாமிய பேரறிஞர்கள் என்று பலதரப்பட்ட வாசகர்களைக் கொண்ட இந்தியாவின் முக்கிய வாரமிருமுறை ஏடு.
இஸ்லாம் சம்பந்தமான ஆக்ககரமான கட்டுரைகளை, செய்திகளை தாங்கி வருவது இதன் பிரத்தேயகத்தன்மை எனலாம்.
ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களின் ஒரே பிரதிநிதி 'தாஃவத்' என்று கூட இதைச் சொல்லலாம்.
அத்தகைய ஒரு பாரம்பர்யம் மிக்க பேரறிஞர்களை ஆசிரியர் குழுவாக கொண்ட
பத்திரிகையின் மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனன் குறித்த தலையங்கம்
தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு வார பத்திரிகையில் கடும் விமர்சனத்துக்கு
உள்ளாகியுள்ளது வேதனையானது.
இதே வார இதழில் பல ஆண்டுகள் சிறப்புச்
செய்தியாளனாக பணியாற்றிய அனுபவமுண்டு. அதன் ஆசிரியர், "இந்த புலனாய்வு
செய்தி திரட்டுவதற்கு பொருத்தமானவர் இவர்தான்!"- என்று சொல்லுவதுண்டு.
வாரஇதழுக்கு வரும் செய்திக்கான முதல் தகவல்களாக வரும் போஸ்ட் கார்ட்
மற்றும் இண்லாண்ட் லட்டர்களில் இதையே - ''பொருத்தமானவர் இவர்தான்!''-
என்று எழுதி தன் கைப்பட அதை என்னிடம் சேர்ப்பதும் உண்டு.
தகவல்களை.. பிரச்சினைகளை சரிப்பார்க்க அடுத்த நாள் கிளம்பும் ஒவ்வொரு
தருணமும் பின்னிரவு தொழுகைகளில் நபிகளாருக்கு திருக்குர்ஆன் கற்றுத் தந்த
அந்த பிரார்த்தனைதான் நெஞ்சு முழுக்க எழும்.
அது இந்தப்
பிரார்த்தனை இதுதான்: "என் இறைவனே, நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும்,
உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும்
உண்மையுடன் வெளியேற்றுவாயாக!"
நபி பெருமானார் மக்காவைத் துறந்து மதீனா நகருக்கு செல்வதற்கு முன்பாக ஓதிச் செல்லும் பிரார்த்தனை இது.
தகவல்களை சேகரிக்கச் செல்லும் போது மிக மிக நேர்மையுடன் நடந்து கொள்ள
வேண்டும் என்பதன் கவலையின் வெளிப்பாடுதான் இந்தப் பிரார்த்தனையின் நோக்கம்.
அதேபோல, யாரைக் குறித்து குறைச் சொல்லப் போகிறோமோ செய்தி வெளியிடப்
போகிறோமோ அவர்தான் நமது முதல் இலக்கு. அவரது வாக்குமூலத்தை, கருத்தைப்
பதிவு செய்யாமல் பத்திரிகையில் அந்த செய்தியை வெளியிடுவது பத்திரிகை
விழுமியங்களுக்கு எதிரானது; இஸ்லாமிய பண்புகளுக்கு விரோதமானது.
இந்த அளவுக்கோளை முன் வைத்து, கட்டுரையைப் பிரசுரித்திருக்கும் முன் தாஃவத்
தலையங்கத்தை படித்திருக்க வேண்டும். புரியாத பகுதிகளை கேட்டு
தெரிந்திருக்க வேண்டும். தாஃவத் ஆசிரியரின் கருத்தையும் சேர்த்து பெட்டி
செய்தியாக வெளியிட்டிருக்க வேண்டும்.
மற்ற பத்திரிகைகளுக்கும் முஸ்லிம் பத்திரிகைகளுக்கும் மிகப் பெரும் வித்யாசம் இருக்கிறது. நம்பகத்தன்மை. வாய்மை ஆகிய பண்புகளே அவை.
"நாம் பொய் சொன்னால்... இந்த பாயானுங்க உண்மையை புட்டு புட்டு
வெச்சுடுவானுங்க..!" - என்று பிற பத்திரிகைகள் நம்மைக் கண்டு அஞ்சும்
விதத்தில் நம்மிடையே இருக்க வேண்டிய வாய்மை மிக்க பண்புகள் அவை.
இந்த நேர்மைக்கான பய உணர்வை கேரளத்தில் இன்று மாத்யமம் ஏற்படுத்தி இருக்கிறது!
யாராவது அஙகே பொய் சொன்னால்.. அடுத்த நாளே மாத்யமம் அதன் உண்மை நிலையை எடுத்து வைத்துவிடும்.
அடுத்ததாக, தாஃவத் பத்திரிகையின் தலையங்கத்தைத் தொடர்ந்து, நமது தேசியப்
பத்திரிகைகள் குறிப்பாக, 'இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இண்டியன்
எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியா இன்னும் பல பத்திரிகைகள் பெரியளவில்
தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.
வணிக யுக்திக்கான அந்தத்
தலைப்புகளை நீக்கிவிட்டு (தமிழக வார ஏட்டில் எழுதியவர்கள் ஒருவேளை இந்தத்
தலைப்பை பார்த்து எழுதிவிட்டார்ளோ என்னவோ) படித்தால்... மிக அற்புதமான
செய்திகள் அவை. எந்த கூட்டலும், சேர்த்தலும் அவற்றில் இல்லை.
இதுவரை இந்த பகிர்மான அரங்கில் வெளிப்படாத, பல தகவல்களை அவை வெளியிட்டுள்ளது முக்கியமானது.
தாஃவத் மற்றும் பிற பத்திரிகைளில் வெளிவந்த மொத்த செய்திகளைத் திரட்டி அதன் கருத்துப் பிழிவை எடுத்தால்...
<<<<< மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனனுக்கு இஸ்லாத்தின் திருச் செய்தி 1975 இல்,எட்டியது.
<<<<< எமர்ஜென்ஸியின் போது, ஜமாஅத் தலைவர்களும், ஆர்எஸ்எஸ்
தலைவர்களும் தடைச் செய்யப்பட்ட இயக்கத்தினராக அறிவிக்கப்பட்டு ஒரே
சிறையில் .. ஒரே அறையில்... அடைக்கப்பட்ட காலத்திலிருந்து
ஆரம்பிக்கிறது.(டைம்ஸ் ஆஃப் இண்டியா இதை அழகாக செய்திகளூடே ஒரு பாராவில்
வெளியிட்டுள்ளது.)
<<<<< யூஸீஃப் நபியின்
சிறைக்குள்ளான அழைப்பியல் முறைமையை ஜமாஅத் தலைவர்கள் கையாண்டதன் விளைவுதான்
ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சனின் மனமாற்ற தடுமாற்றங்கள்.. அதை அவர்
வெளிப்படுத்த முடியாமல் சுற்றி இருந்த வேலிகள், மனநிலை பாதிக்கப்பட்டவராக
பிரச்சாரங்கள் எல்லாம்.
இவற்றை மீறி அவர் போபாலின் 'தஆஜுல்
மஸ்ஜிதில்' ஈகைத் திருநாள் அன்று தொழவிரும்பியதும்! முஸ்லிம்களுக்கு
வாழ்த்துக்கள் கூற விரும்பியதும்!!
சட்டம் ஒழுங்கு
பிரச்சினையாகாமலிருக்க.. அல்லது அவரது எண்ணத்தை நிறைவேற்ற விடாமல்
தடுக்கப்பட.. அவர் முஸ்லிம் சகோதரர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று இனிப்பு
உண்டது அவருடைய குடும்பத்தாருக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் சொன்னது.
தஆஜுல் மஸ்ஜித் என்பது சாதாரணமான பள்ளிவாசலாக கருதினால் ஏமாந்து போனவர்களாவீர்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிவாசல் அது. ஆயிரக்கணக்கானோர் தொழுமிடம் கொண்டது!
போபாலின் மூன்றாம் பெண் ஆட்சியாளர் ஷாஜஹான் பேகத்தால்... 1877 இல்,
கட்டப்பட்ட உலகின் மிகப் பெரிய பள்ளிவாசல்களில் மூன்றாம் இடம் வகிப்பது.
அந்த அம்மையாரின் மரணக் காலம்வரை அதாவது 1901 வரை பள்ளிவாசல் கட்டுமானப்
பணிகள் முழுமையடையாமலேயே இருந்தன. பள்ளிவாசலுக்கான ஒதுக்கீட்டுத் தொகை வேறு
பல நலத்திட்டங்களுக்கு செலவிடப்பட்டுவிட்டது.அதனால ், பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் 1971 வரை நிறைவடையாமல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டைக் கொத்தளம் போன்ற கம்பீரத் தோற்றமும், வெங்காய வடிவிலான வெள்ளை
வெளேர் நிறத்திலான மூன்று டூம்களும், செம்மண் நிறத்திலான வானுயர நெடிது
வளர்ந்த இரண்டு மினாராக்களும் இதன் அழகுக்கு அழகூட்டுபவை.
அதிகாலையில், இருளைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கும் வைகறைத் தொழுகைக்கான
அழைப்பொலிக் கேட்டு யாரும் தொழுகைக்காச் செல்லாமல் இருக்க முடியாது.
இத்தகைய ஒரு மசூதியில்தான் சுதர்சனன் ஜீயும் தொழ விரும்பியதும், சக சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் கூற நினைத்ததும்.
ஆக அவருடைய ஆசைகள் நிறைவேறாமலேயே அவர் தன்னை இன்னார் என்று
வெளிப்படுத்திக் கொள்ள முடியாமலேயே மரணமுற்றது யாராக இருந்தாலும் கவலைக்
கொள்ளவே செய்யும்.
0 comments:
Post a Comment