NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Monday, December 2, 2013

நடப்புச் செய்தி: 'பயிரை மேயும் வேலிகள்!'


சட்டம் என்னும் இருட்டறையிலிருந்து நிரபராதிகளை மீட்டெடுக்க வேண்டிய வழக்குரைஞர்களின் ஒழுக்க மீறல்கள் சமீப காலமாக சொல்லிக் கொள்வதாய் இல்லை. 

சட்ட நூல்களை ஏந்த வேண்டிய கைகள் கொலைக் கரங்களாக மாறிவருகின்றன. ஒழுக்கக் கேடர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் கிரிமினல் சாயல்களில் உருவெடுப்பது நம் சமூக அமைப்பின் மிகப் பெரிய சிதைவாகவே கருதப்படும்.

செய்திகள் வாசிப்பது: பாமரன் : ' என்னய்யா நடக்குது இங்கே?'



ஒரு பக்கம் கல்யாணம் பண்ணிக்காம குடும்பம் நடத்துலாம்னு சொல்றீங்..!

திரும்புற இடமெல்லாம் சாராயக் கடை திறந்துவிட்டிருக்கீங்க..! 

'பார்' நைட் டான்ஸீன்னு ஆம்பள, பொம்பளகள கூத்தடிக்க விட்டிருக்கீங்க..!

குடிபோதையிலே இரண்டு பேரும் எசகு ... பிசகா நடந்துட்டப் பிறகு அவன் கெடுத்துட்டான்.. இவன் கெடுத்துட்டான்னு கூச்சல் போடறீங்க..!

ஆம்புளையா.. பொம்புளையான்னு டெஸ்ட் வேற பண்றீங்க..! 

அணி அணியாய் வந்து ஆர்ப்பாட்டம் செய்றீங்க..!

என்னய்யா நடக்குது இங்கே..?

எரியற கட்டையை இழுத்துட்டா தானா அடுப்பு அணைஞ்சுடப் போகுது. இதுகூடவா தெரியாது உங்களுக்கு..!

உங்கள இந்த பாமரனாலே புரிஞ்சுகவே முடியலே சாமி..! ஆளவிடுங்க..! கூலி வேலைக்கு நேரமாகுது..! நாளெல்லாம் உழைச்சாதான் ஒரு வேள கஞ்சியாவது குடிக்க முடியும். 

நீங்க மெத்த படிச்சவங்க.. உங்க பிரச்னைகள நீங்களே தீர்த்துக்க முடியாதா என்ன?

சிறப்புக் கட்டுரை: 'கால் நூற்றாண்டாயினும் எட்டாத உயரத்தில் நிற்கிறது நீதி!


டிசம்பர் 2 மற்றும் 3, 1984.

அந்த இரவுகள் மறக்கவே முடியாதவை. காட்டமான ஏதோ ஒன்று மூக்கின் சுவாசமாய் நுரையீரல்களை துளைத்தெடுத்து மரணத்தை தூக்கத்திலேயே தந்த இருள் படிந்த சோகமான இரவுகள் அவை. ஆம்..! மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து வெளிப்பட்ட நச்சு வாயு ஆயிரக்க கணக்கான மனித உயிர்களைப் பலி கொண்ட நாள்; ஆயிரமாயிரம் மனிதர்களை வாழ்க்கையின் முடவர்களாக்கிய அந்த இரவுகளை யாராலும் மறக்க முடியாதுதான்.

ஆனால், பரிதாபமான இந்த மரணங்களைவிட கொடிய செய்தி என்னவென்றால், கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆன பின்பும் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதுதான். 

பாதிக்கப்பட்ட போபால்வாசிகள் தகுந்த இழப்பீடுகள் வேண்டியும், விபத்தால் நடை பிணங்களாய் உயிர் வாழ்ந்து கொண்டிருப்போருக்கு போதிய சிகிச்சை கேட்டும், விபத்து நடந்த நிறுவனத்தின் நச்சுக் கழிவுகளை நீக்கும்படியும், குடும்ப உறுப்பினர்களை இழந்து பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு வேலை கேட்டும் போராடிவருபவர்களின் வாழ்க்கையின் சோகம் இன்னும் நீதி தேவதையின் காதுகளில் எட்டுவதாய் இல்லை.

இந்நிலையில், உலகின் மிகவும் மோசமான விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து செல்லும் விதமாக பல்வேறு சமூக சேவை அமைப்புகளோடு கைக்கோர்த்துக் கொண்டு செவ்வாய் அன்று நீதிக்கான ஒரு கூட்டத்தை நடத்தவிருக்கிறார்கள்.

மத்திய அரசும், மாநில அரசும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது என்கிறார்கள் பெரும் பகுதி மக்கள்.

29 ஆண்டுகளாக நாங்கள் பல்வேறு வகைகளில் எங்களால் முடிந்தளவு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், எந்தவிதமான பலனும் கிடைப்பதாக இல்லை. மத்திய - மாநில அரசுகள் உலகின் பார்வையிலிருந்து இந்த விபத்தை மூடி மறைக்கவே பார்க்கின்றன!" - என்கிறார் 'போபால் குரூப் பஃர் இன்பர்மேஷன் அண்ட் ஆக்‌ஷன்' அமைப்பைச் சேர்ந்த ரசனா திங்கரா.

"..இதுவரை நீக்கப்பட்ட 350 டன் கழிவுகள் 25,000 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் இன்னும் அகற்றப்படாமலேயே மூடப்பட்டிருக்கும் நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எப்போது அகற்றுவார்கள்? யார் அகற்றுவார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில்  சொல்வாரில்லை!" - என்கிறார் ரசனா தொடர்ந்து.

போபால் நச்சு வாயு விபத்தால் ஒரே ஒரு இரவில் 3,500 பேர் கொல்லப்பட்டனர். நச்சு வாயுவின் பாதிப்பால் 25,000 க்கும் மேற்பட்டோர் தகுந்த மருத்துவ வசதி இல்லாமல் நாள்தோறும் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள்.

"இந்த கொடும் சம்பவத்துக்கு காரணமான நபர்கள் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்பாவிகளின் உயிரைப் பறித்த இந்த கொடியவர்களை அரசாங்கம் இதுவரையும் தண்டிக்கவில்லை! என்பது வேதனையானது என்கிறார் சங்கர்ஷ் சமிதி என்னும் அமைப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணா நாம்தியோ.

"29 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக, பல்வேறு குறைபாடுகள் கொண்டவர்களாகவே பிறக்கிறார்கள்!" - என்கிறார் ரஷீத் பீவி.

அரியணை சிம்மாசனங்களும், வாழ்வின் மோகங்களும் லட்சியமாய் போன அரசியல் தலைவர்களிடம் வேறு எதைதான் எதிர்பார்க்க முடியும்? 

சமூகத்துகான நல்ல தலைவர்களும்,  அத்தகைய தலைவர்களை உருவாக்கும் நற்சமூக அமைப்பும் உருவெடுக்கும்வரை இந்த நிலைமை நூறாண்டுகளானாலும்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.  ஊமையரும், செவிடரும், குருடருமாய் போன மக்கள் இதை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!




காலப்பெட்டகம்: 'விபரீதமான அளவுகோல்கள்!'

பர்மிய போராளி ஆங்சான் சுிகியை வீட்டுக்காவலில் வைத்தது மனித உரிமை மீறல் என்றால்..


கஷ்மீர் ஹீரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சையல் அலி ஷா ஜீலானியை இந்த ஆண்டில் மட்டும் 235 நாட்கள் வீட்டுக் காவலில் வைத்ததற்கு என்ன பெயர்?