அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிப்.9, 2013 அன்று சில மணி நேரத்துக்கு முன் அந்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் சிறைத்துறை அதிகாரிகளிடமிருந்து எழுதுகோலையும், தாளையும் பெற்று தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதம் இது:
அடியில் உள்ளது திகார் சிறைக் கண்காணிப்பாளர், அப்சல் குருவின் கடிதத்தோடு இணைப்பையும் இணைத்து அவரது குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்த கடிதம்:
அப்சல் குரு கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது:
எனது மதிப்பிற்குரிய குடும்பத்தார்க்கும் மற்றும் எனது சக தோழர்களுக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
மேன்மைமிக்க
இந்த உயர் அந்தஸ்துக்கு என்னை தேர்வு செய்த இறைவனுக்கு நான் நன்றி
செலுத்திக் கொள்கின்றேன்.
எனது தரப்பிலிருந்து .. எனது தோழர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நாம் அனைவரும் நீதி - நேர்மையில் நிலைத்துள்ளோம். நமது முடிவும் நீதி - நேர்மைக்கான பாதையில்தான் பயணிக்க உள்ளது.
இந்த
தருணத்தில் எனது குடும்பத்தாருக்கான தாழ்மையான வேண்டுகோள் இது: "எனது
மரணம் குறித்து நீங்கள் வருந்துவதைவிட எனக்களிக்கப்பட்ட உயர் அந்தஸ்துக்கு
நீங்கள் அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்!"
கருணையாளனான இறைவன்தான் உங்கள் பாதுகாவலன்! அவனே உங்களின் உதவியாளன்! நான் உங்களை அவனது பாதுகாப்பிலேயே விட்டு விடைபெறுகின்றேன்!
ஆதாரம் மற்றும் நன்றி: http://www.ndtv.com/article/india/read-afzal-guru-s-last-letter-to-his-wife-332023?pfrom=home-topstories
0 comments:
Post a Comment