சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Monday, January 28, 2013
Wednesday, January 23, 2013
Tuesday, January 22, 2013
Saturday, January 19, 2013
'கிட்மோ' - அமெரிக்காவின் சட்டரீதியான பூலோக நரகம்!
Thursday, January 17, 2013
Wednesday, January 16, 2013
Monday, January 14, 2013
'மௌலவி மக்தூம்' றிஸானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதம்: 'றிஸானாவின் அந்த இறுதி நேரத்தில், மௌலவி மக்தூம்'
وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல் குர்ஆன் 2:157)சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் றிசானாவை அவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் (மரன சாசனம்) பற்றி வினவவே இச்சந்திப்பு இடம்பெற்றது.
அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.
உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப்படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.
அப்போது நான், "உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா?"- என்று கேட்டேன். "என்ன சொல்வது?"- என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.
மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரிய படுத்தினேன்.
"என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா?"- என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது. அங்குள்ள அதிகாரிகளிடம் இது பற்றி கூறி, அவருக்காக பரிந்து பேசினேன். அவர்களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.
அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது? என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொட்சம் இருப்பதாகவும், அதனை சதகா செய்திடுமாரும் வேண்டிக் கொண்டார்.
அவற்றை யாருக்கு? எங்கு? எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்கப் பட்டபோது, இங்கேயே, எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார்.
அவருக்கு “ஷஹாதா” (அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு) என்னும் சாட்சிப் பிரகடனம் கூற சொல்லிக் கொடுக்கப் பட்டது.
அதன் பிறகு இரண்டு ரகஅதுகள் தொழவும், துஆ செய்யவும் அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது.
அங்கிருந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தது போன்றே இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது.
அதன் பிறகு அவருக்கு நியமிக்கப்பட்டிருந்தது போன்றே அல்லாஹ்வின் நாட்டத்துடன் சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
உங்கள் மகள் ரிசானா விடயத்திலும் இதனையே கற்றுக் கொண்டோம். முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். நான் கூட உங்கள் மகளுக்காக நிறையவே துஆ செய்தேன். உங்கள் மகளின் மரண தண்டனைப் பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்கு கேள்வி பட்டது. அதாவது மேற்குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது. அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது “இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப் படுகிறார் என்றால் அநியாயக் காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக” என்று கூட பிரார்த்தித்தேன்.
மேலும் அது பற்றிய செய்திகள் வருகிறதா? என்று அடிக்கடி இணைய தளங்களை பார்த்தேன். எனினும் அங்கே செல்லும் வரை எந்த செய்தியையும் காணவில்லை. அங்கிருந்த அதிகாரிகளிடம் இது பற்றி வினவிய போது, உங்கள் நாட்டு தூதரகம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே உத்தியோகப் பூர்வமாக செய்தி வரும் வரை நான் வேறு யாரிடமும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.
இது இவ்வாறிருக்க இன்று ஊடகங்களில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் நிறைய பரிமாறப் படுகின்றன. சில முஸ்லிம் சகோதரர்கள் கூட ஈமானுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அல்லாஹ் எங்களை மன்னிக்க வேண்டும். உண்மையை விளங்கப் படுத்தும் நோக்கிலேயே இதனை எழுதினேன். நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.
நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை வெளி உலகுக்கு கொண்டு வருவேன். இங்கு விமர்சிக்கப் படுவது அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் சட்டம் என்பதாலேயே இதற்கு முயற்சி செய்கிறேன். வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.
உங்கள் மகள் ரிசானா அநியாயாமாக கொல்லப் பட்டிருந்தால், தெரிந்து கொண்டே அவருக்கு அநியாயம் செய்தோரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் இதற்கு பதிலாக அநியாயம் செய்தோரின் நன்மைகளை எடுத்து இவரின் நன்மைகளில் சேர்க்கப் படவோ, அவர்களுக்கு போதியளவு நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரின் தீமைகளை அவர்களின் மீது சுமத்தப் படவோ வாய்ப்புள்ளது. மேலும் இவருக்கு நிறைய வெகுமதிகளையும், சுவன பாக்கியத்தையும் இறைவன் வழங்குவான். அதே நேரம் இவர் தவறிழைத்திருந்தால் அந்த தவறு இத்தண்டனை மூலம் மன்னிக்கப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
உயிரிழந்த அக்குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை என்பதற்காக அவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னிபதற்கும், மன்னிக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. மன்னித்திருந்தால் நிறைய நன்மைகளை அடைந்திருப்பார்கள் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்த தவறவில்லை.
وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
அவர்கள் இக்குழந்தையை எவ்வளவு சிரமத்துடம் பெற்றெடுத்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். மேலும் அவர்கள் உங்கள் மகள் தான் இக்கொலையை செய்திருப்பாள் என்று உறுதியாகவே நம்பாமல் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு முன் வந்திருக்க முடியாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோபத்துடன் இருந்தார் என்பதே.
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
உங்கள் மகள் உலகமறிய இவ்வாறு மரணத்தை சந்தித்ததன் மூலம் என்னென்ன மாற்றங்கள், நன்மைகள் ஏற்பட போகிறதோ என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் ரிசானா விடுதலையாகி வந்திருந்தாலும் என்றோ ஒரு நாள் மரணமடைந்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?
பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பணிப் பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாகுவது உண்மையே. எனவே இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்று பெற்றோர்கள், கணவன்மார்கள் உட்பட அனைவரும் தமது பொறுப்பிலுள்ள பெண்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எந்நிலையிலும் இறைவனின் விதியை மீறி உங்கள் மகள் ரிசானாவின் மரணம் இடம்பெற்றிருக்க முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:
ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக, உங்கள் பொறுமைக்கு நற்கூலி வழங்குவானாக, உங்கள் மகள் ரிஸானாவின் பாவங்களை மன்னித்து அவருக்கு சுவன பாக்கியத்தைத் தந்தருள்வானாக…!
இப்படிக்கு
A J M மக்தூம்
Maid’s execution: KSA won’t allow any foreign interference
-
Demonstrators show an image of Rizana Nafeek during a protest in Colombo on January 11, 2013, against her execution. (Reuters)
Jafa Rafee |
அன்புச் சகோதரர்கள் அருள் எழிலன், கார்டூனிஸ்ட பாலா, சகோதரிகள் கவின்மலர், தமிழச்சி ஆகியோரின் கனிவான கவனத்திற்கு...
இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று திட்டமிட்டு பரப்பி வரும் ஊடகங்களும் இந்த கட்டுரை.
ஒரு குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக சவூதியில் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் இலங்கைப் பெண்
ரிசானா....
பாதிக்கபட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல,
குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று
கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?) உரிமைப் போராளிகளும், இஸ்லாமிய
சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று திட்டமிட்டு பரப்பி வரும்
ஊடகங்களும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, இஸ்லாமிய
மார்க்கத்தைக் களங்கப்படுத்தப் போராடி வருவதால் அவர்களுக்குப்
பதிலளிப்பதற்காக இந்தக் கட்டுரை.
குற்றவாளி இலங்கைப் பெண் என்பதால் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்கராகவோ, ஐரோப்பியராகவோ இருந்தால் ராயல் பர்டன் எனப்படும் ராஜ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது.
அரசு சார்ந்த குற்றங்களுக்குத் தான் ராஜமன்னிப்பு பொருந்தும். தனிநபர் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை சவூதி மன்னரால் எதுவும் செய்ய முடியாது.
ஒரு மலையாளியைக் கொலை செய்த குற்றத்திற்காக 3
சவூதி இளைஞா்களுக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. காரணம், அந்த
மலையாளியின் வாரிசுதாரர்கள் மன்னிக்கவில்லை என்பதால்..
15 ஜுலை 1977 ஆம் ஆண்டு இளவரசி மிஸ்ஸால் பிந்த் ஃபஹத் பின் முஹம்மத் பின் அப்துல் அஜீஸ் ஆலே சௌத், படிக்கச் சென்ற இடத்தில் லெபனானில் நடந்த விபச்சார குற்றத்திற்க்காக ஜித்தாவில் வைத்து அவருடைய 19 வது வயதில் தலை வெட்டப்பட்டார்.
அதே போன்று 25 மார்ச் 1975ல் மன்னர் ஃபைஸல் பின்
அப்துல் அஜீஸ் ஆலே சௌத் அவர்களை சுட்ட கொன்ற மன்னருடைய தம்பி மகன் இளவரசர்
ஃபைஸல் பின் முஸைத் ரியாத் சதுக்கத்தில் பொது மக்கள் முன்னால் 18 ஜூன் 1975
தலை வெட்டப்பட்டார்.
ஆக, சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே. இங்கு
நாடு, மொழி, மதம் எதுவும் பார்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை
மட்டுமே பார்க்கப்படுகின்றது.
ஒரு முன்னாள் பிரதமரையும்
காவல்துறை உயர் அதிகாரியையும் இன்னும் 15 பேரையும் கொன்றவர்களை,
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரின் மனநிலையிலிருந்து பாராமல் ஜனாதிபதி
மன்னித்தால் விடுதலை என்று கூறும் இந்தியத் திருநாட்டின் சட்டம் சவூதியில்
இல்லை தான்.
டெல்லி பெண்ணைக் கற்பழித்துக் குடலை உருவிக் கொன்ற
கயவர்களை பிரணாப் முகர்ஜி நினைத்தால் மன்னித்து விடலாம் என்று கூறும்
இந்தியச் சட்டம் சவூதியில் இல்லை தான்.
படித்து, தன்
குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஏழை
வாட்ச்மேனின் மகள் வினோதினியின் முகத்தை அமிலம் ஊற்றிச் சிதைத்து, கண்களைப்
பறித்து, அவளை நிர்மூலமாக்கிய காமுகனையும் அரசாங்கம் நினைத்தால் மன்னித்து
விடலாம் என்ற இந்தியச் சட்டம் சவூதியில் இல்லை தான்.
பாதிக்கப்பட்டவன் மன்னித்தால் தவிர வேறு யாரும் - அவர் மன்னராக இருந்தாலும்
அதில் தலையிட முடியாது என்று சொல்லும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் தான்
சவூதியில் இருக்கின்றது.
இதுபோன்ற சர்வதேச விமர்சனங்களுக்கு
அஞ்சியே 30 லட்சம் ரியால்கள் (கிட்டத்தட்ட 5 கோடி இந்திய ரூபாய்)
தருகிறேன், மன்னித்து விடுங்கள் என்று சவூதி அரசாங்கம் கெஞ்சியும் அந்தப்
பெற்றோர் மன்னிக்கவில்லை என்றால் அவர்கள் அடைந்த பாதிப்பின் தன்மை நமக்குத்
தெரியவில்லையா?
ராஜ மன்னிப்பு இந்த விஷயத்தில் உண்டு என்றால் இப்படி
நஷ்ட ஈடு தருகிறோம் என்று கெஞ்சுவதற்குப் பதில் அதைச் செய்திருக்குமே!
இதைச் சிந்திக்க வேண்டாமா?
கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோர்,
குற்றவாளியை மன்னித்திருக்கலாம். ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.
ஆனால் மன்னிக்காமல் விட்டதற்காக அவர்களைக் குற்றம் சொல்லக் கூடாது. சட்டம்
அவர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையைத் தான் இங்கு நாம் பார்க்க வேண்டும்.
சர்வதேச நிர்ப்பந்தத்திற்கோ, விமர்சனங்களுக்கோ பயந்து இந்தத் தண்டனையை
நிறைவேற்றாமல் இருந்தால் தான் அது அநீதி. இந்த விஷயத்தில் சவூதி அரசாங்கம்
நீதியை நிலைநாட்டியுள்ளது.
அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தவறு
செய்யவில்லை என்று ரிசானா எழுதியதாக ஒரு கடிதத்தைக் காட்டுகிறார்கள்.
அக்கடிதத்தில், விசாரணையின் போது நிர்ப்பந்தப்படுத்தி என்னிடம் கொலை
செய்ததாகக் கையெழுத்து வாங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி
நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கி, அவளைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்
சவூதி அரசாங்கத்திற்கு என்ன வந்துவிட்டது? அப்படிச் செய்திருந்தால் 5 கோடி
தருகிறேன், மன்னித்து விடுங்கள் என்று கொல்லப்பட்ட குழந்தையின்
பெற்றோரிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் என்ன?
எடுத்தேன் கவிழத்தேன் என்று இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு விடவில்லை. ஏழு வருட விசாரணைக்குப் பின் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தனை பெரிய மன்னராட்சியைக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கமே ஒரு
குற்றவாளியை மன்னிக்கும் விஷயத்தில் தலையிட முடியவில்லை,
பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மட்டுமே விடுதலை என்று கூறி, அடித்தட்டு
மக்களின் சட்டமாகத் திகழும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப்
பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. பழிக்காமல் இருங்கள்.
“எங்கள் தேசம்” பத்திரிகையில் வெளியான சிறப்புக்கட்டுரை:
ரிஸானா நனைந்தாள் உலகம் அழுதது. ஏன்?
ரிஸானா நபீக்' உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்... நீதி சரிந்ததா?﹐ நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு... இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம்.
ஏன் ரிஸானா இவ்வளவு பிரபல்யமானாள்? இலங்கையின் ஒரு மூலையில் வறுமையின்
கோரப் பிடியில் சிக்கித் தவித்த அந்த சின்னவளை உலகம் ஏன் இவ்வளவு தூரம்
தலைநிமிர்ந்து நோக்கியது. அந்த அதிசயம் நிகழ்ந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான்
இருக்கிறது. ஆம்﹐ ரிஸானாவின் விடயத்தில் ஷரீஆ நீதி
சம்பந்தப்பட்டிருக்கிறது﹐ அவ்வளவுதான்.
இவளைப் போன்ற எத்தனையோ ரிஸானாக்களை அமெரிக்க﹐ இஸ்ரேல் நீதிகள் ஆப்கானிலும்
ஈராக்கிலும் பலஸ்தீனிலும் கொன்று குவித்திருக்கின்றன. செச்னியா விடயத்தில்
ரஷ்யாவின் நீதி﹐ காஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் நீதி﹐ முஸ்லிம்கள்
விடயத்தில் மியன்மாரின் நீதி﹐ சிரியா விடயத்தில் ஈரானின் நீதி என்பன யாவும்
அமெரிக்க﹐ இஸ்ரேல் நீதிகளை விடக் குறைந்ததல்ல.
உலகம் இந்த
நீதிகளை அலட்டிக் கொள்ளவில்லை. பேசுபொருளாக அவற்றை எடுத்துக்
கொள்ளவுமில்லை. எனினும்﹐ ஷரீஆ நீதியை பேசுபொருளாக மாற்றி அதற்கு
எல்லையில்லாத முக்கியத்துவத்தை உலகம் கொடுத்திருக்கிறது கொடுக்கத்தான்
வேண்டும்.
ஷரீஆ நீதியை உலகின் பேசுபொருளாக ஆக்கிய ரிஸானாவுக்கு எமது பிரார்த்தனைகள்.
ரிஸானாவின் உயிர் மீண்டும் உலகத்துக்குத் திரும்பி வராது. ஆனால்﹐ பல
ஆயிரம் ரிஸானாக்களுக்கு உயிர் கொடுக்க ஷரீஆ நீதி உலகை நோக்கி மீண்டு வரும்.
அப்போது உயிர் கொடுத்த ரிஸானா வாழ்ந்துக் கொண்டிருப்பாள்.
ரிஸானாவின் உயிருக்காக நல்லெண்ணத்தோடு அழுத முஸ்லிம்﹐ முஸ்லிமல்லாத அனைத்து
உள்ளங்களையும் வாழ்த்திவிட்டு ரிஸானா நபீக்கின் விடயத்துக்கு வருகிறேன்.
ரிஸானாவின் மரண தண்டனை குறித்து இதுவரை ஊடகங்களில் வெளியான செய்திகள்
அனைத்தையும் தொகுத்து வகுத்தால் ரிஸானா நபீக் விடயத்தில் இரண்டு விதமான
அலசல்கள் நடைபெற்றுள்ளன. அந்த அலசல்கள் இரண்டில் எதை உலகம் சரி கண்டாலும்
ஷரீஆ நீதியை எவரும் குறை கூற முடியாது. ஷரீஆ நீதி அந்த இரண்டு
அலசல்களின்போதும் முன்வைக்கப்பட்ட கீழ்த்தரமான விமர்சனங்கள்﹐ கண்டனங்கள்
என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது.
அலசல் 01
இந்த அலசலில் நீதி﹐ விசாரணை குறித்து பல வகையான விமர்சனங்கள் ஊடகங்களில்
உலா வருகின்றன. ரிஸானா குற்றவாளியல்ல. ஒரு சதிமோசக் கொலையை அவள்
செய்யவில்லை. செய்ய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. ரிஸானாவின்
கையிலிருந்த குழந்தை இறந்ததற்கான காரணங்கள் விஞ்ஞானபூர்வமாகக்
கண்டறியப்படவில்லை. அது இயற்கை மரணமாகவும் இருக்கலாம். அல்லது பால்புரையேறி
மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம். குழந்தை இப்படித்தான் இறந்தது
என்பதைக் கண்ட சாட்சிகளும் இல்லை.
இந்த நிலையில் ரிஸானா குற்றவாளி
என்பதை உறுதி செய்வதற்கான விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. தீர்ப்பு
அவசரமாக வழங்கப்பட்டிருக்கிறது. இது நீதியல்ல. தனது பக்க நியாயங்களை
முன்வைத்து வாதிடுமளவு அறிவுத் திறமைகள் இல்லாத ஒரு சின்னப் பெண் மொழி
தெரியாத புதியதொரு சூழலில் நீதி விசாரணையொன்றுக்கு முகம் கொடுக்கும்போது
அச்சத்துக்குட்படுவது இயல்பு. அவளது நியாயங்களை முன்வைத்து வாதிடுவதற்கு
சட்டத்தின் உதவியை அவள் பெற்றாளா? அல்லது பெற வேண்டும் என்ற அறிவு அவளுக்கு
இருக்கவில்லையா?
இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவள்
குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளாள். இது நீதியின் நடைமுறைகளுக்கு
அப்பாற்பட்டது. அதனால்தான் ரிஸானா நபீக் வீணாக உயிரிழக்க
வேண்டியேற்பட்டுள்ளது.
இவ்வாறு ஊடகங்கள் ரிஸானா நபீக்கிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு கோணங்களில் விமர்சிக்கின்றன.
இந்த விமர்சனங்கள் உண்மையானால் (இந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மைகள்
ஆராயப்பட வேண்டும்) குற்றம் யாரைச் சாரும்? ஷரீஆ நீதியையா? அல்லது நீதி
விசாரணை செய்து ரிஸானாவைக் குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கியவர்களையா? இந்த
விமர்சனங்கள் உண்மையானால் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரிஸானாவை விசாரணை
செய்து குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியவர்களுக்கே உரியன.
ஷரீஆ நீதி எந்த வகையிலும் ரிஸானா விடயத்தில் அநீதியிழைத்ததாகக் கூற
முடியாது. இலங்கையில் பிரதம நீதியரசரை விசாரித்த முறை பிழையானது என
ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஏன் ஊடகங்கள் நீதி பிழையானது என விமர்சிக்காமல்
விசாரித்த முறை பிழையானது என விமர்சிக்க வேண்டும்? இலங்கையின் நீதி
விடயத்தில் ஊடகங்களின் முகம் வேறு ஷரீஆ நீதி விடயத்தில் ஊடகங்களுக்கு
மற்றொரு முகமா?
நீதியை விமர்சிப்பவர்களிடமே நீதியில்லாததை
இங்கு பார்க்கிறோம். இங்கு மட்டுமல்ல﹐ உலகம் முழுவதிலும் இன்று இப்படியான
இரட்டை வேடம்தான் தாண்டவம் ஆடுகின்றது. அமெரிக்கா﹐ இஸ்ரேல் போன்ற
வல்லரசுகளின் வேடத்தை எல்லோரும் தரித்திருக்கிறார்கள். தங்களது சுயத்தை
இழந்து வேடம் பூண்டவர்களால் நீதியை எப்படி நிலை நாட்ட முடியும்.
அலசல் 02
இது ஊடகங்களில் தனியாக அலசப்பட்ட விடயமல்ல. முன்னையதோடு இரண்டறக் கலந்து
வந்த அலசல்தான் இது. எனினும்﹐ அலசியவர்களுக்கு விளங்காத ஒன்றை
விளக்குவதற்காக அவர்களது அலசல்களை நான் இரண்டாகப் பிரித்துக்
காட்டுகிறேன். அலச முன்பு இதனை அவர்கள் பிரித்துப்பார்த்திருக்க வேண்டும்.
எனினும்﹐ பிரித்துப் பார்க்குமளவு நிதானம் அவர்களிடமில்லை. ஷரீஆ
என்றவுடனேயே நிதானத்தை இழந்து விடுகிறார்கள் ஒரு பூதத்தைக் கண்டது போல்.
இரண்டாவது அலசல்: விசாரணை சட்டபூர்வமாக நடந்தேறியுள்ளது. கொலை என்பதற்கான
ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சந்தேகங்களுக்கிடமின்றி ரிஸானா கொலையாளிதான் என்பது நிரூபணமாகி விட்டது
என்று வைத்துக் கொள்வோம். இந்த நிரூபணம் உறுதியானதன் பின்பு தண்டனை
வழங்கப்படுகிறது. தண்டனை ஷரீஆ நீதியின்படிதானே வழங்கப்படுகிறது. அந்த
வகையில் ஷரீஆ நீதி காட்டுமிராண்டித்தனமானதே என கூக்குரலிட்டன ஊடகங்கள்.
இதுதான் ஊடகங்களில் அலசலுக்குட்பட்ட இரண்டாவது விடயம்.
உண்மையில்
ஷரீஆ நீதி கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு கொலையாளிக்கான தீர்ப்பு கொலை
என்றுதான் வரையறை செய்கிறது. இது காட்டுமிராண்டித்தனமா?
இது
காட்டுமிராண்டித்தனம் என உலகமே வாதிட்டாலும்﹐ ஒருவர் மாத்திரம் இதனைக்
காட்டுமிராண்டித்தனம் எனக் கூற ஒருபோதும் முனைய மாட்டார். அவர்தான் கொலை
செய்யப்பட்டவரின் சொந்தங்கள்﹐ தாய்﹐ தந்தையர்கள் அல்லது பிள்ளைகள்﹐
சகோதரர்கள் என்போர். இவர்களது உணர்வைத்தான் ஷரீஆ நீதியின் கர்த்தாவாகிய
அல்லாஹ் கருத்தில் எடுத்திருக்கிறான். கொலை செய்யப்பட்டவரின்
குடும்பத்தவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.
நீதி
அவர்களுக்குத்தான் வேண்டும். காட்டுமிராண்டித்தனம் எனக்
கூக்குரலிடுபவர்களுக்கு இங்கு நீதி தேவையில்லை. அவர்கள் கொக்கரித்துக்
கொண்டிருக்கட்டும். நீதி தேவையானவர்களுக்கு நான் நீதி வழங்குகிறேன் என
மனிதனைப் படைத்தவன் எடுத்த முடிவுதான் ஷரீஆ நீதி.
உலகில்
நடைபெறுகின்ற எத்தனையோ குற்றச் செயல்களுக்கெதிராக வீதியிலிரங்கி
ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் அந்தக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக 'மரண
தண்டனையை' அறிமுகம் செய்﹐ அமுல்படுத்து என்று கோஷமிடுகின்றனர். அங்கெல்லாம்
பாதிக்கப்படட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து மரண தண்டனைக்கு வந்தனம்
கூறுபவர்கள் ஷரீஆ நீதி என்றவுடனேயே மரண தண்டனையைக் காட்டுமிராண்டித்தனம் என
எப்படி வர்ணிக்கிறார்கள்.
அவர்கள் கோஷமிடும் அல்லது வாழ்த்துக்
கூறும் மரண தண்டனை ஈவிரக்கமற்றது. ஷரீஆ நீதி விதிக்கும் மரண தண்டனை
கருணையுடன் கலந்தது. கொலைக்கு கொலை என்று தீர்ப்பு வழங்கும் 'ஷரீஆ நீதி'
மற்றுமொன்றையும் வலியுறுத்துகிறது என்பதை நிதானமிழந்த விமர்சகர்கள்
கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறார்கள். அல்லது வேண்டுமென்றே
புறக்கணிக்கிறார்கள்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பம்தான் ஷரீஆ
நீதியின்படி தனது இறுதி முடிவை வழங்க வேண்டும். ஷரீஆ நீதிமன்றம்
விசாரணைகளின் பின் நடைபெற்றுள்ளது கொலைதான் என்பதை ஆதாரங்களோடு உறுதி செய்த
பின்னர் குடும்பமே தீர்ப்பு வழங்க வேண்டும். ஷரீஆ நீதியின் மூலகர்த்தாவான
அல்லாஹ் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கையில் நீதி வழங்கும் பொறுப்பை
ஒப்படைத்துவிட்டு இருந்துவிடவில்லை. மாறாக﹐ அந்தக் குடும்பத்தினரின்
உணர்ச்சிகளைத் தடவிக் கொடுத்து நீங்கள் விரும்பினால் உங்களுக்கு உயிர்
நட்டத்தை விளைவித்தது போல் கொலையாளிக்கும் உயிர் நட்டத்தை விளைவிக்கலாம்.
அல்லது கொலையாளியிடமிருந்து நீங்கள் விரும்பும் ஒரு நட்ட ஈட்டுத் தொகையைப்
பெற்றுக் கொள்ளலாம். அல்லது பெருமனதோடு மன்னித்தே விடலாம். என பல தரப்பட்ட
தெரிவுகளை அவர்கள் முன் வைக்கிறான் ஷரீஆவின் மூலகர்த்தா.
அது
மட்டுமல்ல மன்னிப்பதை ஊக்குவித்து அதற்கு நன்மை தருவதாகவும் கூறுகின்றான்.
ஷரீஆ நீதி எத்துனை அற்புமானது மனித உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதனின்
மானுசீகத்தையும் உயர்த்துகின்றது. இதுவா காட்டுமிராண்டித்தனம்?
ரிஸானா நபீக் விடயத்திலும் இந்த நடைமுறையே கைக்கொள்ளப்பட்டது. ஷரீஆ
நீதிமன்றம் கொலை எனத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் நாம் முன்னர்
பார்த்ததுபோல்﹐ அவர்கள் தவறு செய்திருந்தால் அது அவர்களின் குற்றமே ஷரீஆ
நீதியின் குற்றம் அல்ல. பின்னர் தண்டனைத் தீர்ப்பு குடும்பத்திற்கே
விடப்பட்டது. மன்னர் குடும்பம் முதல் அனைவரும் ரிஸானாவை மன்னிக்குமாறு
இறந்த அல்லது கொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்தை வேண்டினர். குற்றம்
நடைபெற்று ஏழு ஆண்டுகள் ஆகியும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
ரிஸானாவை மன்னிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. இறுதி நேரத்திலும் அவர்களது
விருப்பம் கேட்கப்பட்டபோது அவர்கள் மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை.
அவ்வளவு கள்நெஞ்சமா அவர்களுக்கு? என்று யாராவது இந்த இடத்தில் வினவலாம்.
எனினும் முஸ்லிம்களாகிய நாம் அப்படிக் கேட்க மாட்டோம்﹐
'மன்னித்திருக்கலாம்' அல்லது 'மன்னித்திருந்தால் நன்றாக இருக்குமே' அல்லது
'மன்னித்திருக்க வேண்டுமே' என்றுதான் நாம் கூறுவோம். காரணம்﹐ ஷரீஆ நீதி
மன்னிப்பை ஊக்குவித்தாலும் தண்டிக்கும் உரிமையைப் பறிக்கவில்லை. அதனால்
அந்த உரிமையை முஸ்லிம்களாகிய நாமும் பறிக்க முடியாது. முஸ்லிமல்லாதவர்கள்
மன்னிக்காத அந்தத் தாய் தந்தையைக் குறை காண்பது அவர்களைப் பொறுத்தது.
எனினும்﹐ ஷரீஆ நீதியை அவர்கள் குறை காண்பது எந்த வகையிலும் நீதியானது அல்ல.
குறை காணும் ஒவ்வொருவரும் பிறறொருவரால் தனது குழந்தை கொலை செய்யப்பட்டால்
எந்த மனநிலையில் இருப்பார் என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து கொள்ளட்டும்.
இதனை எழுதும் நான்﹐ ரிஸானா சம்பவத்தை விமர்சிப்பவர்கள் எப்படியான நோக்கில்
தங்களது விமர்சனத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையே
வழங்கியுள்ளேன். ரிஸானா சம்பவத்தின் பின்னணிகள் எவை? உண்மைகள் என்ன? என்பதை
விமர்சனங்கள் செய்யும் ஊடகங்கள் வாயிலாகவன்றி நேரடியாக ஆராய்ந்து
அறிந்தவனல்ல.
எனினும்﹐ ஒரு மனிதன் என்ற வகையில் எனதுள்ளம்
ரிஸானாவுக்காக அழுகிறது. ஒரு முஸ்லிம் என்ற வகையில் எனதுள்ளம் பின்வரும்
விடயத்தில் ஆறுதலடைகிறது.
அல்லாஹ் ஒரு ரிஸானாவை வைத்து உலகத்தை ஒரு முறை உசுப்பியுள்ளான். அந்த
உசுப்பலில் இஸ்லாம் எல்லையற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது பெற்றுக்
கொண்டிருக்கிறது. எனினும்﹐ அந்த உசுப்பலில் பலியானவள் ரிஸானா அல்லவா?
அதனால் ஷரீஆ நீதியை விமர்சித்தவர்கள் கூட நாளை மறுமையில் நான் அந்த
ரிஸானாவாக இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்குமளவு ரிஸானாவைத் தனது
அருளால் அல்லாஹ் பரவசப்படுத்துவான் போலும் என எனது மனம் கூறுகின்றது. யா
அல்லாஹ்! ரிஸானாவின் பாவங்களை மன்னித்து உனது அருள் சுவனத்தில் அவளை
சேர்த்தருள்வாயாக!
(நன்றி: 2013-01-16 “எங்கள் தேசம்” )
-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்-
குளோபல் இஸ்லாம் - GI-SHAHEED-
SHINAS MANSOOR |
தகவல் உதவி: SHINAS MANSOOR
Sunday, January 13, 2013
Wednesday, January 2, 2013
'விடியலைத் தேடிய வெள்ளைப் புறா!'
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் அப்பாவி ஈராக்கியர்கள் மீது நடத்திய கொடுமைகளைக் கண்டு உலகம் அதிர்ந்து போனது. அமெரிக்க ராணுவத்தினர் பாக்தாத் நகருக்கு வெளியே அபூகாரிப் மற்றும் குவாண்டானாமோ சிறைகளில் ஈராக்கிய கைதிகளிடம் நடந்து கொண்ட மனித உரிமை மீறல்களைக் கண்டு உலக மக்கள் கொதித்தனர்.
ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருந்த சோவியத் ரஷ்யாவும் தனது சித்தாந்தத்தை திணிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளில் மனித இனம் பறிகொடுத்த உயிரிழப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. 1917-இல், ரஷ்யப் புரட்சியில் 13 மில்லியன் மக்கள் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்!) படுகொலை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அதேபோல, பிரெஞ்சு புரட்சியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தலைவெட்டி சாய்க்கப்பட்டனர்.
உலகில் நடந்த புரட்சிகள், போர்கள், அத்துமீறல்கள் எதை எடுத்துக் கொண்டாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதைக் காணலாம். அல்ஜீரிய நாட்டு விடுதலைக்கான யுத்தத்தில் 2.5 மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்திய விடுதலைப் போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சம்! சிரியா, ஈரான், எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் ஈராக் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய வாழ்கைக்கான போராட்டங்களில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை பல.. பல லட்சங்களைத் தாண்டும்!
ஆனால், இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபிகளார் (அன்னாரின் மீது இறைவனின் கருணையும், பேரருளும் பொழிவதாக!) நிகழ்த்திய மாபெரும் புரட்சியின் உயிரிழப்புகள் எவ்வளவு தெரியுமா? 1018 பேர் மட்டுமே!
23 ஆண்டு காலத்தில் முடிந்த அந்த இஸ்லாமியப் புரட்சியில், 80 போர்கள் மற்றம் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 27 ராணுவ நடவடிக்கைகளில் நபிகளார் நேரிடையாகவே கலந்து கொண்டார்கள். 259 முஸ்லிம்கள், 759 முஸ்லிம் அல்லாதோர் என்று மொத்தத்தில் 1018 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள்.
நபிகளார் எந்த சித்தாந்தத்தை நிறுவதற்காக இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, அந்த இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தை நிறுவுவதற்காக எத்தகையை வழிமுறைகளைப் பின்பற்றினார்களோ அதுவே மனித குல அமைதிக்கான தீர்வாகும். உலகில் மனித உரிமைகள் காக்கப்படவும், ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையிலான வாழ்வு மலருவதற்கான ஒரே வழியாகும்.
பூகோள ரீதியாக அரபு நாட்டில் நபிகளார் தோன்றியதற்கான காரணங்கள் மிக முக்கியமானவை.
இறைவனின் திருத்தூது சமர்பிக்கப்பட இதைவிட பொருத்தமான இடம் வேறு இருக்க முடியாது. வரலாற்று ரீதியாக சீர்த்திருத்தம் செய்ய அரபு சமூதாயத்தை தவிர இறைத்தூதருக்கு பொருத்தமான சமுதாயம் உலகில் வேறில்லை! அந்தக் காலக்கட்டத்தில், பல்வேறு சமுதாயங்கள் அரியணையில் ஏறி வாழ்க்கை வளங்களில் மூழ்கித்திளைத்து.. மனித உரிமைகளைப் பறித்து... அநீதி அட்டுழியங்களை இழைத்து ஓய்ந்து போய் இருந்தன.
ஆனால், அரபு சமுதாயமோ எந்தவிதமான சித்தாந்த தாக்கமும் இல்லாமல் வெறுமையுடன் .. அதேநேரத்தில் புத்துணர்வுடன் இருந்தது. மற்ற சமுதாயங்கள் நாகரீகம்-கலாச்சாரம் பெயர்களால் சீர் கெட்டுப் போய் இருந்தன.
ஆனால், இன்று மேற்கத்திய கலாச்சார பாதிப்பால், சுக போகிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும், இழிந்த கோழைகளாகவும் அரபு மக்கள் இருப்பதைப் போல அன்று எந்த பாதிப்புக்கும் இவர்கள் ஆளாகவில்லை. அதேபோல, அன்றை அரபு மக்கள் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுத்த வீரர்களாகவும், தாராள மனம் கொண்டவர்களாகவும், யாருக்கும் அடிமைப்படாத சுதந்திரதாகம் கொண்டவர்களாகவும், தன்மானமே உயிரினும் பெரிது என்று சுயமரியாதை உடையவர்களாகவும் விளங்கினார்கள். ஆடம்பரமில்லாத அவர்களின் எளிய வாழ்க்கை மற்றொரு சிறப்பம்சமாகும்.
அரபு மக்களிடையே ஏராளமான தீமைகள் மண்டிக் கிடந்தன. இதன் காரணம் ஒழுக்கத்தைப் போதிக்கவும், வாழ்க்கையைச் சீர்ப்படுத்தவும் சரியான வழிகாட்டி இல்லை. மாபெரும் இறைத்தூதர்கள், இப்ராஹீம் நபி மற்றும் இஸ்மாயீல் நபிமார்களுக்குப் பிறகு இந்த சந்ததியிலிருந்து 2,500 ஆண்டுகளாக இறைத்தூதர்களின் வருகையும் இல்லை. சீர்க்கெட்டுப் போயிந்த இத்தகைய மனிதர்களை மனிதப் புனிதர்களாக்குவது சாமான்ய பணியல்ல. சிறப்பியல்புகளோடு அறியாமைக் காரிருளுக்குள் சிக்கிக் கிடந்த அரபு மக்களைச் சீர்த்திருத்தம் செய்தால் கொள்கைகோமான்களாக்கிட முடியும் என்ற யாதார்த்த நிலை.
இறைவனிடமிருந்து மனித இன வழிகாட்டுதலுக்காக.. இறங்கவிருந்த திருச்செய்தியோ... அற்புதமானது! நெஞ்சில் இறங்கி செயலுருவம் பெற வேண்டியது. இதற்கு பொருத்தமான தொடர்பு சாதனம் அவசியம்.
அதற்கான மொழிதான் அரபி. உயரிய சிந்தனைக்கான தகவல் தொடர்பு சாதனம். அரபு மொழி, மொழியல் ரீதியாகவம் வளம் வாய்ந்தது. சுருக்கமாக சொல்லி விளங்க வைத்திட வல்லது. சின்னச் சின்ன சொற்றொடர்களில் பெரும் பெரும் கருத்துக்களை உள்ளடக்கிவிடலாம்! கேட்போர் உள்ளங்களை இனிய நயத்தோடு சுண்டியிழுத்திடலாம்! மொத்தத்தில் திருக்குர்ஆனுக்காக தேர்வு செய்யப்பட்ட மொழி அரபி.
1434 ஆண்டுகளுக்கு முந்தைய உலகம்!
நவீன அறிவியல் சாதனங்களோ, வசதிகளோ இல்லாத உலகம். இன்று நம் முன் உள்ள வாகன வசதிகளோ, தகவல் தொடர்பு சாதனங்களோ எதுவும் அன்று இல்லை. உலக நாடுகளிலிருந்து அரபு நாடு தனிமைப்பட்டிருந்தது. சுற்றியும் பாரசீகம், ரோமப் பேரரசு, எகிப்து போன்ற வல்லரசு நாடுகள்.. அன்றைய சூப்பர் பவர்கள்!
பரந்த பாலைநிலம் உலக நாடுகளோடு அரபு நாட்டை துண்டித்து வைத்திருந்தது. அரபு வணிகர்கள் உலக நாடுகளோடு தொடர்பு கொள்ள மாதக் கணக்கில் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவும் எந்த நேரமும் உயிரிழப்புக்கு ஆளாக்கும் பேராபத்தான பயணங்கள்! மக்களிடையே கல்வி அறிவில்லை. அதை பெறுவதற்கான எந்த ஆர்வமும் இல்லை. அரபு மக்களிடையெ முறையான ஆட்சி-அதிகாரமோ, சட்ட - திட்டங்களோ ஏதுமில்லை! பல குடும்பங்கள் இணைந்த குலங்கள், கோத்திரங்கள்.. தனித்தனி சட்டங்கள் கொண்டிருந்தன. அந்த சமூக அமைப்பில் கொலை - கொள்ளை வழிப்பறிகள் சர்வசாதாரணமாக இருந்தன. தொடர்ந்து நடந்த போர்களில் ஜீவ நதியைப் போல ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது.
மனித உயிருக்கு எவ்வித மதிப்பும் இல்லை. குடி, விபச்சாரம், பெண்ணடிமைத்தனம், சிசுக் கொலை சமூக கலாச்சாரமாக இருந்தது. தினமும் ஒரு திருவிழா என்று ஆண்டு முழுக்க களியாட்டங்கள்! இணைவைப்புக் கூத்துக்கள்! நூற்றுக் கணக்கான சிலைகள் ஓரிறை இல்லமான கஅபாவில் இடம் பெற்றிருந்தன! 'இறைவன் ஒருவன்!'-என்ற தாரக மந்திரத்தை நிலைநிறுத்த தமது வாழ்நாளை அர்ப்பணித்த இப்ராஹீம் நபி மற்றும் அவரது வலக்கரமாக திகழ்ந்த இஸ்மாயீல் நபி இவர்களின் சிலைகளும் அதில் அடக்கம்! பயணத்தில் சிலைகளைச் சுமந்து செல்ல மறந்து போவோர் ஆயத்தக் கடவுள்களாக (Readymade) பாலையில் ஒட்டகத்தின் பாலைப் பீய்ச்சி சிலை வடித்து வணங்கும் மூடப்பழக்கம் சமூகம் முழுக்க மண்டிக் கிடந்தது.
இத்தகைய அறியாமைக் காரிருள் கும்மிருட்டாய் போர்த்தியிருந்த அரபு மண்ணில்தான் நபிகளார் தோன்றினார்கள். குழந்தைப் பருவத்திலேயே பெற்றொரை இழக்கிறார்கள். பிறகு தமக்கு பொறுப்பாளராக இருந்த பாட்டனாரையும் இழக்கிறார்கள். மனித இனத்தின் மீது கருணை மழைப் பொழிந்த நபிகளாரின் இளமையில், இளகிய குடும்ப உறவுகள், பந்த - பாசங்கள், சம்பந்தமான பயிற்சிகள் பெறக்கூட வாய்ப்பில்லாமல் போனது. சிறுவயதில் ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறார்கள். ஒருமுறை வணிகப் பயணம் ஒன்றையும் மேற்கொள்கிறார்கள். நபிகளாரின் தூய.. வாய்மையான வாழ்க்கையை கண்டோர் அவர்களை 'அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர்', 'அஸ்ஸாதிக் - உண்மைப்படுத்துபவர்', என்ற சிறப்புப் பட்டப் பெயர்களால் அழைக்கிறார்கள். தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், சமூக வாழ்வியல் சூழல்களும் நபிகளாரைப் பெரிதும் பாதிக்கின்றன!
மனிதர்கள் தத்தமது மோட்சத்துக்கான வழியைத் தேடி அலையும்போது, நபிகளார் ஒட்டு மொத்த சமூகத்தின் விடியலைத் தேடினார்கள். மக்காவுக்கு வெளியே உள்ள மலைக் குகையில் தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கிறார்கள். நபித்துவ பேரொளி இறங்கும்வரை இந்தத் தேடல் தொடர்கிறது.
ஓரிறைக் கொள்கை, இறைக்கட்டளைகளின் அடிப்படையிலான உயரிய வாழ்க்கை அமைப்பு போதனைகளாக தொடர்கிறது. மூதாதையர் மரபுகளை விட முடியாமல் கோபம் கொள்கிறது சொந்த சமூகம்; பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இன்னல், இடுக்கண்களை அவர் சகித்துக் கொள்கிறார். கல்லாதவரின் வாயிலிருந்து வெளிப்படுகிறது வேத மெய்ஞானம்! 40 வயதுக்கு முன் மக்கள் கேட்டிராத அற்புத செய்திகள்; அதே திருவாயிலிருந்து வெளிப்படுகின்றன கோடி கோடி மின்னல்களாய்!
கல்லாத மனிதரான நபிகளார், சமூகவியல், ஒழுக்கவியல், வாழ்வியல் உயர் நெறிகள், அறிவியல், பொருளியல், அரசியல் என்று மனித வாழ்வின் அத்தனைக் கூறுகளும் உட்படுத்திய வாழ்வியல் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். யுக.. யுக.. மனிதர்களின் ஈருலக மோட்சத்துக்கான வாழ்வியல் திட்டம் அது! இறைவனின் வழிகாட்டுதல். மனிதர்களுக்கான வாழ்வியல் சட்டங்களை நபிகளார் போதிக்கிறார்கள்.
ஹிரா மலைக் குகையில் வெளிப்பட்ட அந்தப் பேரொளியைச் சுமந்தவாறு நபிகளார் மக்காவின் வீதிகள், தெருமுனைகள், திருவிழாக் கூடாரங்கள், தனிநபர்கள் என்று ஒவ்வொரு மனித உள்ளத்திலும் சேர்க்கத் துடியாய் துடிக்கிறார்கள். அனைத்து இன்னல்களையும் பொறுமையாய் தாங்கிக் கொள்கிறார்கள். அண்டை நாடான 'தாயிப்' வரை இந்த திருச்செய்தி சேர்ப்பதற்கான முனைப்புத் தொடர்கிறது. உடல் ரத்தத்தால் தெப்பமாய் நனைந்தபோதும், தமது திருச் செய்தி சரியான முறையில் சேர்க்க முனைந்தோமோ? என்றுதான் அவரது உள்ளம் வினாக்களை எழுப்புகிறது. பிழையிழைத்தோரின் தவறுகளைப் பொறுத்தருளும்படி இறைஞ்சுகிறது. அவர்களின் வருங்காலச் சந்ததிகளாவது இறைச் செய்தியை ஏற்கலாம் என்று தொலை நோக்கில் சிந்தனைப் பயணம் தொடர்கிறது. இப்படி பத்ர், உஹத், அகழ் போர்கள் என்று அதே திருச்செய்திக்காக தற்காப்பு வாள் ஏந்தியப் பயணங்கள் வரலாற்றில் தொடர்கின்றன.
23 ஆண்டுகள்!
எண்ணற்ற கொடுமைகள் அனுபவித்த அந்த 23 ஆண்டுகள்!
இறுதியில் மக்கா வெற்றியின் போது ஒட்டகத்தின் முதுகோடு முதுகாய் நபிகளார் மக்காவில் நுழைந்த காட்சியைக் கண்டு அந்த கர்வம் கொள்ளாமை பண்பைக் கண்டு வரலாறு வியக்கிறது. மன்னிப்பு அருள்மழையால்.. கொடியவர்களை எல்லாம் நபிகளார் மன்னித்ததைக் கண்டு மனிதம் நாணத்தால் தலை குனிந்தது!
நபிகளார் கொண்டு வந்த வாழ்வியல் திட்டமும், அதை அமல்படுத்த அன்னார் எடுத்துக் கொண்ட வழிமுறைகளுமே இன்றைய உலக்கு அத்யாவசியமானது. அற்புதமான இந்த சித்தாந்தந்தின் மகிமையை அதன் உயரிய பண்புகளை அறியாமல் ஏற்றுக் கொண்டோரும், அது என்னவென்று அறியாதோரும் அல்லது அதை அறிந்து கொண்டு வரட்டுத்தனமாக ஆதிக்கப் போக்கில் எதிர்போரும் நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
'தி லாஸ்ட் ஒன்லி ஒன் ஆப்ஷன் ஆஃப் தி மேன் கைண்ட்!'
ஆம்.. மனித இனத்துக்கான ஒரே ஒரு இறுதி தீர்வு இஸ்லாம்தான்!