NewsBlog

Friday, July 12, 2013

வாழ்வியல்: " இதுதான் சாமார்த்தியம் "



அது ஒரு முன்னணி விற்பனை நிலையம். 

அதில் வேலைக்காக வந்தவரிடம் அதன் மேலாளர், "விற்பனைத்துறையில் முன் அனுபவம் உள்ளதா?” – என்று விசாரித்தார். 

"நான் ஏற்கனவே சேல்ஸ் மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் வந்தவர். 

"சரி.. நாளை முதல் நீங்கள் வேலையில் சேர்ந்து கொள்ளலாம்!- என்றார் மேலாளர். 

முதல் நாள்.

விற்பனை நிலையம் மூடும் நேரம் மேலாளர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் விற்பனை செய்தீர்கள்?” – என்று விசாரிக்கிறார்.

"ஒரே ஒருவரிடம் மட்டும்…" – என்று புதிதாக பணிக்கமர்ந்த அந்த பணியாளரிமிருந்து பதில் வருகிறது.

"என்ன? ஒரே ஒருவர் மட்டுமா? உங்களோடு பணிப்புரியும் சகாக்கள் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 நபர்கள்வரை விற்பனை செய்யக் கூடியவர்கள் தெரியுமா?” – என்றார் மேலாளர்.

“உங்களின் பணி  நிரந்தரமாக்கப்பட  வேண்டுமானால்  நீங்களும் மற்றவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும்!”- என்று அறிவுறுத்திய அவர் தொடர்ந்து விசாரித்தார்: “சரி இன்று எவ்வளவு டாலருக்கு விற்பனை செய்தீர்கள்?”

பத்து லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்!” – அமைதியாக சொன்னார் புதிதாக பணிக்கமர்ந்தவர்.

"என்ன..!” - என்று வியப்பு தெரிவித்த மேலாளர் மீண்டும் கேட்டார்: “ஒரே ஒரு நபரிடமா இவ்வளவு பெரும் தொகைக்கான விற்பனை நடந்தது?”

ஆம்..!” - என்று தலையாட்டிவிட்டு அவர் சொல்ல ஆரம்பித்தார்:

அய்யா, நமது விற்பனை நிலையத்துக்கு வந்தவரிடம் சிறிய தூண்டில் இருப்பதைக் கண்டு அது குறித்து விசாரிக்க ஆரம்பித்தேன். இன்னும் கொஞ்சம் பெரிய தூண்டிலை வாங்கினால்.. இன்னும் பெரிய மீன்களை பிடிக்கலாமே என்று ஆலோசனையும் சொன்னேன். அதை ஏற்றுக் கொண்ட அந்த வாடிக்கையாளர்.. கூடவே பிஷிங் ராட்.. பிஷிங் கியர் போன்ற மீன்பிடி சாதனங்களையும் சேர்த்து வாங்க தொடங்கினார்.

அதன் பிறகு நான் அவரிடம்,நீங்கள் எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று விசாரித்தேன். அதற்கு அவரோ ‘கரையில் அமர்ந்து மீன் பிடிக்கும் தகவலையும் சொன்னார். 

நடு ஆற்றில் படகில் சென்று மீன் பிடித்தால் பல இடங்களில் மீன் பிடிக்கலாம். படகில் ஓய்வும் எடுக்கலாம் அல்லவா என்று ஆலோசனை சொன்னதும் அதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு படகுக்காக ஆர்டர் கொடுத்தார்.

நானும் நமது ‘படகு விற்பனைத்துறைக்கு அவரை அழைத்துச் சென்று நல்லதொரு படகை வாங்கிக் கொடுத்தேன். 

படகை வாங்கி முடித்த கையோடு அந்த வாடிக்கையாளர் “தம்பி, என்னுடைய இதோ இந்த கார் இப்பொழுது வாங்கிய ‘போட்டை’ இழுக்குமா என்று தெரியவில்லையே!” – என்று சந்தேகம் தெரிவித்தார்.

அவருடைய காரை பரிசோதித்தபோது உண்மையில் அது படகை இழுக்க தகுதியனாதல்ல என்று நான் சொன்னதை அவரும் அங்கீகரித்தார். எனது சிபாரிசை ஏற்று புது காரை வாங்கவும் முடிவெடுத்தார். 

புதிதாக பணிக்கமர்ந்த அந்த இளைஞர் சொல்வதை ஆச்சரியத்துடன் மேலாளர் கேட்டுக் கொண்டிருக்க தொடர்ந்தார் அவர்:

“… நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக்கை அவருக்குக் காட்டினேன். அதனுடைய பல்வேறு சிறப்பம்சங்களையும் அவருக்குக்கு விளக்கினேன். மகிழ்ந்து போன அவர் அந்த காரையும் வாங்கிக் கொண்டார்.

பின்னர் அவரிடம், “ அய்யா,  நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்?” – என்று விசாரித்தபோது, “இப்போதைக்கு நிரந்தரமான இடம் கிடைக்காமல் தவிக்கிறேன்!” – என்று வருத்தப்பட்டார்.

நான் அவருக்கு நான்கு பேர் தங்கக் கூடிய ஒரு அழகிய செயற்கைக் கூடாரத்தையும் நமது நிறுவனத்திலிருந்து வாங்கிக் கொடுத்தேன்!” – என்றதும் மேலாளர் வியப்புடன், “.... என்ன  ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?" – என்றார். 

"அய்யா அவர் வாங்க வந்ததோ தலைவலிக்கான மாத்திரை.நான்தான் அவரிடம் மீன் பிடித்தலை பொழுது போக்காக்கிக் கொண்டால் மனதுக்கு உற்சாகம் கிடைக்கும். அதன் பிறகு தலைவலி உங்கள் பக்கம் எட்டிக் கூட பார்க்காது என்று சொன்னேன்!” – என்றார் படு அமைதியாக.

இதுதான் சாமார்த்தியம் என்பது.

அதன் பிறகு என்ன?

புதிதாக பணிக்கமர்ந்தவர் "கிடு கிடு" வென்று பதவி உயர்வு பெற்று வாழ்வில் முன்னேறினார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
 

0 comments:

Post a Comment