NewsBlog

Saturday, February 8, 2014

விழிகள்: 'குப்பைக் கிளறும் கொக்குகள்!'


‘கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து’  

அதாவது காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில் கொக்கைப்  போலக் காத்து இருந்து காலம் வாய்த்தபோது கொக்கு மீனை குத்தினாற் போலத் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும்!' என்கிறார்  வள்ளுவர். (காலம் அறிதல்:490)

இத்தகைய கொக்குகளின் நிலை இன்று சொல்லிக் கொள்வதாய் இல்லை.

ஒருகாலத்தில் ஜனசந்தடியற்ற வயல்வரப்பு, குளம், குட்டைகளில் தங்கள் வாழ்வாதாரத்தைக் தேடிக் கொண்ட கொக்குகள் அதற்கு அடுத்ததாய் பெருகி வரும் சூழல் மாசுக்களால் தங்கள் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள நவீன மனிதர்களின் அத்தனை முன்னேற்ற சாதனங்களையும் பழக்கப்படுத்திக் கொண்டன.


சென்னை, எண்ணூர் கடற்கழி பக்கிங்கால்வாயின் இணைப்பாகி சவுக்கு, உப்பு போன்ற சரக்குகளின் நீர் வழித்தடமாய் ஒருகாலத்தில் இருந்தது.

தற்போதோ பெருகிவரும் தொழிற்சாலைகளின் விளைவாக நீர் மாசு பட்டதால் கொக்குகளின் உணவு அரிதாகிவருகிறது.

கொக்குகள் குப்பைகளைக் கிளறுகின்றன என்றால் நம்புவீர்களா?
நம்பிதான் ஆக வேண்டும் இதோ சாட்சி.

சென்னை, எண்ணூர் கடற்கரை சாலையில் சத்தியவாணி முத்து நகரை ஒட்டி கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை கிளறும் கொக்குகள் இதோ! 

காக்கையும், எங்கள் சாதி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் வாழ்வியல் தேடலுக்காக தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள குப்பைகளை கிளறுகின்றன இந்தக் கொக்குகள்.

காடுகளைத் தாண்டி யானைகள் வருவது ஆபத்துதான்! வனங்களை விட்டு புலிகள் போன்ற கொடிய விலங்குள் எல்லைகளைத் தாண்டக் கூடாதுதான்!

ஆனால் படி தாண்டலுக்கு விலங்குகள் மட்டுமா காரணம்? வனங்களை பிடுங்கிக் கொண்டால் வனவாசம் போக விலங்குகளுக்கு இடம் ஏது?

இனி கொக்குகள்கூட வீடுகளை நோக்கி படையெடுக்கலாம் எச்சரிக்கை!

படங்கள்: இக்வான் அமீர் 

காணொளிக்கு: 
http://www.youtube.com/watch?v=yVVIsYEFAWQ&feature=youtu.be

0 comments:

Post a Comment