NewsBlog

Wednesday, February 19, 2014

சுற்றுச் சூழல்: ‘சூழலால் மாறிப் போனது வாழ்க்கை!’

 
இடம்: சென்னை, எண்ணூர் கடற்கரை சாலை. படம்: இக்வான் அமீர்.
மைனா: என்ன பொறுக்கிட்டிருக்கீங்க கொக்கக்கா? குளத்துப் பக்கம் போகலியா?

கொக்கு: குளம் எங்கேயிருக்கு? வயல் எங்கே இருக்கு? எல்லாம் பிளாட் போட்டில்லே வித்திட்றாங்க!

காக்கா: கவலைப்படாதீங்க பிரண்டஸ்! மனுஷன் இருக்கிறவரைக்கும் குப்பையும் இருக்கும். நீங்க எங்க கட்சியிலே சேர்ந்திருங்க.. இப்படி குப்பைகளைக் கிளறி வயிறு நிறைய சாப்பிடலாம்.
குளங்களைப் பறிக்கொடுத்து, குப்பைகளைக் கிளறிக் கொண்டிருக்கும் கொக்குகள்.               
ஹாஸ்யமாக இது இருந்தாலும், எவ்வளவு துரதிஷ்டவசமானது!  நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மாறுதலுக்கேற்ப  தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மனிதன்?

“சொந்த பணத்தாலேயே சூனியம் வைத்துக் கொள்கிறான்!” – என்று வேடிக்கையாக சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஆனால், சொந்த கரங்களாலேயே மனிதன் தன் வாழ்க்கைக்கு உலை வைத்துக் கொள்வது என்னவோ உண்மை.

சுற்றுச் சூழலை கெடுத்துவிட்டு… உலகை மயானமாக்கிவிட்டு சந்ததிகளுக்கு எதை விட்டுப் போகப் போகிறான் மனிதன்? மரணத்தை அன்றி!

0 comments:

Post a Comment