NewsBlog

Wednesday, February 5, 2014

சிறப்புக் கட்டுரை:‘மண்ணின் நிறங்களோடு தோள் கொடுங்கள்!'




"திருப்பூரில் அனியாயமாக 10 வயது சிறுவர்கள் 7 வயது சிறுமியை வண்புணலுறவு கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எங்கே செல்கிறோம் நாம்

எங்கள் கல்லூரி வாழ்க்கையில் சில மாணவர்களின் நடத்தையைக் கண்டு 'எங்கே செல்கிறோம் நாம்?' - என அன்றைய பெரியவர்கள் கேட்டது நினைவுக்கு வருகிறது.

உடல் மாற்றங்களை சரி வர புரிந்து கொள்ளாததாலும் மூன்றாந்தர இணையங்களின் தாக்குதல்களாலும், சரி வர புரிதல் இல்லாததன் விளைவோ இது? பாலியல் கல்வியை கட்டாயமாக்குவது அவசியமோ?" 

- எனது முகநூல் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி இது.

மேற்கத்திய புலிகளைப் பார்த்து கோணல்-மாணல், கோடுகளைப் போட்டுக் கொண்ட பூனைகள் நாம் என்பதை பாவம் அவர் பார்க்க மறுக்கிறாரோ என்னவோ! நமது கலாச்சாரம் கைநழுவி போவதற்கான அடையாளத்தின்ஆரம்பம்தான் இது. நல்லவேளை! நமது தலைமுறைகள் அனுபவிக்கப் போகும் கொடுமைகளை காண நாம் இருக்கமாட்டோம்! 

மனித வாழ்வியலுக்கு அத்யாவசியமான அனைத்துத்துறை சார் விஷயங்களுக்கும் நமது நாடே ஏற்றுமதிக்கான சந்தை; ஆன்மிகம் உட்பட! அப்படியிருக்கும் நிலையில் இத்தகைய அவலங்கள் ஏன் ஏற்படுகின்றன? பொருள்சார் பேராசையால், வாழ்வியலைப் பல்வேறு கூறுகளாக்கிக் கொண்டதன் விளைவே இது.

ஒரு சீனனும், ருஷ்யனும், ஜப்பானியனும், கொரியனும் வளர்ந்து நிற்பதற்கு காரணம் அவனது மண் சார்ந்த கலாச்சார ஒழுக்க விழுமியங்கள்தான்! அதைத்தான் தற்போது சிதைக்கப் பார்க்கிறது மேற்கத்திய வல்லூறு. அவர்களின் வாழ்க்கை அவலங்களிலிருந்து நாம் பாடம் பெறுவதே அறிவுடமை. மேற்கத்திய கலாச்சார அமைப்புக்கு அடிமைப்படாமலிருப்பது நமது கொள்கையாக்கிக் கொண்டால் இது சாத்தியமே!

வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் விட்டுப் போக இருக்கிறது அற்புதமான வாழ்வியல் பரிசு என்று கூட இதைச் சொல்லலாம். ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு இது! 

சமீபத்தில் நான் குஜராத் மாநிலத்தின் புறநகர் பகுதி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது, பூச்செடிகள் வாங்க பக்கத்திலிருக்கும் நர்ச்சரிக்கு செல்ல வேண்டி வந்தது, அம்மாநிலத்தில், குஜராத்திதான் பெரும்பான்மையினர் பேசுகிறார்கள் என்பது தகவல் பறிமாற்றத்துக்கான சிரமமாக இருந்தாலும் இந்தியை வைத்து ஓரளவு ஒப்பேற்ற முடிந்தது.


ஆனால், மொழி பறிமாற்றங்களைத் தாண்டி அந்த நர்சரியின் சொந்தக்காரரிடம் என்னை அதன் பணியாள் அறிமுகம் செய்தபோது, நெஞ்சைத் தொட்டு தன் முகமன்களை பறிமாறிக் கொண்டது, நடுங்கும் குளிரில் நெருப்பு மூட்டி அருகில் இருக்கையைப் போட்டு இருத்திக் கொண்டது எல்லாமே மனித இயல்புகளைத் தாண்டி, இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவே என்னைப் பிணைத்து சகஜமாக்கியது.

அதேபோல, புத்தாண்டு கூத்துக்கள் எதையும் என்னால் அங்கு, பார்க்க முடியவில்லை; நள்ளிரவில் வெடித்த ஓரிரு வெடிகளைத் தவிர! பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லும் மேல்தட்டு மக்கள் மது அருந்தும் பொருட்கள் சம்பந்தமாக கடும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் நீண்ட கார் வரிசைகளில்.

அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் குறைந்து, மேற்கத்திய கலாச்சாரம் பெருகிவருவதும் வேதனையோடு பார்க்க முடிந்தது.

எந்த செயலானாலும் அதன் விளைவுகளைப் பார்த்துதான் அதை நாம் செய்வோம். ஆனால், பரவிவரும் கட்டுப்பாடற்ற வாழ்வியல் மோகம் அந்த எல்லைகளைப் பீய்த்து எறிந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

சமூக அமைதியும், அதன் விளைவான சமூகத்தின் வளர்ச்சியும் மிகவும் இன்றியமையாதது. வகுப்புவாதத்தை மூட்டைக்கட்டிவிட்டு, சமயம் மற்றும் சமயம் சாராதவர்கள் எல்லாம் அவரவர் எல்லைகளில் ஒன்றிணைந்து வருங்கால சமூகத்தை நற்சமூகமாக வார்த்தெடுக்க முன்வரவேண்டும்.

இதற்காக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதும் தவிர்க்க இயலாதது. 'காட்சி ஊடகங்களில் எதைக் காணலாம்? எதைக் காணக்கூடாது?' - என்று கற்றுத் தருதல், வளைத்தளங்களில் பாதுகாப்பாய் வலம் வர கற்றுத் தருதல் என்று அத்தனையும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தோழர்களாய் இருந்து கற்றுத் தருவதும் அவசியம். வரட்டுத்தனமாய் தடுப்பதைவிட வழிநடத்துவது முக்கியமானது.

0 comments:

Post a Comment