NewsBlog

Friday, February 28, 2014

இதழியல்: காமிராவில் கைவண்ணம்: 10,'பில்டர்களின் பயன்பாடு'


புகைப்படம் எடுப்பவர்கள் அடிக்கடி ஃபில்டர்கள் பற்றிப் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்.

சரி.. பில்டர்கள் என்றால் என்ன? அவற்றின் பயன் என்ன?

காமிராவில் உள்ள 'லென்ஸ்' பற்றி உங்களுக்குத் தெரியும். காமிரா லென்ஸ் மட்டுமின்றி, டெலஸ்கோப், பைனாகுலர் லென்ஸ் எல்லாம் கூட ஏறக்குறைய ஒரே விதமானவை. அவை சாராரணக் கண்ணாடிகளை விட வித்தியாசமானவை.

காமிரா லென்ஸ் எத்தகையதாக இருப்பினும் படம் எடுக்கையில் ஃபில்டர்களைப் பயன்படுத்தவது மிகவும் நல்லது.

இந்த ஃபில்டர்கள் எந்த வகையில் உதவும்?

காமிரா லென்ஸில் கீறலே விழாது என்று சொல்ல முடியாது. அது நாம் எப்படி அதனைக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தது. காமிரா லென்ஸில் சில சமயங்களில் நம் கைவிரல்கள் பட்டுவிட வாய்ப்பு உண்டு. கைவிரல்கள் மட்டுமல்ல, நம் உடலின் இதர பகுதிகளும் கூட லென்ஸில் பட்டுவிடவும் கூடும். நம் விரல்களில், உடம்பில், தோலில் ஒரு வகை 'ஆசிட்' தன்மை உண்டு என்று உங்களுக்குத் தெரியும். 

லென்ஸில் நம் விரல்களோ, இதர உறுப்புகளோ படுவதால் அவற்றின் ஆசிட் தன்மை நாளடைவில் லென்ஸ் என்ற மாயக்கண்ணடியை அரித்துவிடக்கூடும். அதனால், லென்ஸ் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

லென்ஸில் நம் கைபடாமல், கீறல் விழாமல், வேறு வகையில் பாதிக்கப்படாமல் லென்ஸைப் பாதுகாப்பது எப்படி? அதற்கு இந்த ஃபில்டர்கள்தான் தக்க துணை.

ஃபில்டர்களும் விலை உயர்ந்தவைதான். ஆயினும் அதைவிட லென்ஸின் விலை அதிகமாயிற்றே!

நான் ஒரு தொழில்முறை படப்பிடிப்பாளன். விலை உயர்ந்த காமிராக்கள்தான் வைத்திருக்கின்றேன். அந்தக் காமிராக்களில் உள்ள லென்ஸ்கள் எனக்கு மிகவும் முக்கியமானவை. எனவே, அவற்றைப் பாதுகாக்க ஃபில்டர்கள் பயன்படுத்துகின்றேன். 

ஃபில்டர்களின் விலை எனக்குப் பெரிதல்ல. ஆண்டுதோறும் பழைய ஃபில்டர்களை வீசிவிட்டு, புதிய ஃபில்டர்களை நான் வாங்கிக் கொள்வேன். ஆனால், லென்ஸ் விஷயத்தில் அவ்வாறு செய்ய முடியாது அல்லவா?

நான் இப்படிச் சொல்வதால் லென்ஸைப் பாதுகாப்பது மட்டும்தான் ஃபில்டர்களின் வேலை என்று நினைத்து விடாதீர்கள். அதன் பயன்பாடு வேறு. லென்ஸைப் பாதுகாப்பது மட்டுமல்ல; பிரகாசமான வெளிச்சத்தை வடிகட்டவும் ஃபில்டர்களைப் பயன்படுத்துகின்றேன். 

சாதாரணமாக, அமெச்சூர் புகைப்பட கலைஞர்களுக்கு ஃபில்டர்கள் அத்தனை முக்கியம் என நான் கருதவில்லை. ஆயினும், தொழில்முறை படப்பிடிப்பாளர்களுக்கு அது தேவை. ஒளியை மட்டுப்படுத்த அது அவசியம்.

சூரிய ஒளி நிறமற்றதாக தெரிந்தாலும் அதில் வானவில்லில் தெரியும் அத்தனை நிறங்களும் உண்டு. அதேபோல, சூரிய ஒளியிலிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத 'அல்ட்ரா வயலெட்' எனப்படும் புற ஊதா கதிர் வீச்சு நாம் பயன்படுத்தும் பிலிம் சுருள்களை, லென்ஸை பாதிக்கும் வாய்ப்புகளும் உண்டு.

எனவே, வண்ணப் படங்களை எடுக்கும்போதாவது,  U.V. ஃபில்டர்களைப் பயன்படுத்தினால் லென்ஸோடு படச்சுருளும் பாதுகாப்புப் பெறும்.

- ஆரி மில்லர்.
ஆரி மில்லர்


0 comments:

Post a Comment