NewsBlog

Wednesday, September 18, 2013

சிறப்புக் கட்டுரை: 'சொந்த நாட்டின் அடிமைகளான முஸ்லிம்கள்!'

 
வழக்கம் போலத்தான் இந்த வகுப்பு கலவரங்களிலும் வகுப்பு  வெறியர்கள் பெண்களைக் குறிவைத்து அவர்களது கற்பையும், மானத்தையும் சூறையாடியுள்ளார்கள். முஸாபர்நகர் மற்றும் அதன் சுற்றுப் புறங்களிலும் பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது. 

உத்திரப்பிரதேசத்தின் 'முஸாபர்நகர்', 'ஷாமிலி' மற்றும் 'பானிபட்' மாவட்டங்களுக்கு உட்பட்ட 'லிஸார்', 'லங்க்', 'பஹாவாடி', 'ஹஜன்பூர்', 'முஹம்மத்பட்', 'பாக்பட்' போன்ற குக்கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்கள் குடும்பத்தார் முன்னிலையிலேய கயவர்களால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள குடும்பத்தாருடன் கிராமங்களிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த போது இந்த கொடூரம் நடந்தாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் சொல்கிறார்கள்.

அனைத்தையும் இழந்து தங்கள் தாய் மண்ணிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கானோர் 'கய்ரானா' மற்றும் 'கண்டாலா' போன்ற நகரங்களில் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபோதும் தங்கள் தாய் மண்ணுக்கு  திரும்ப அவர்களுக்கு துணிவில்லை. இனி இழப்பதற்கு அவர்களிடம் ஒன்றுமேயில்லை.

இந்த நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களிலிருந்துதான் தாங்கள் பறிகொடுத்த கண்ணியத்தை கண்ணீர் துளிகளோடு அவர்கள் தயங்கி தயங்கி உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உயர்சாதி வகுப்பினரான 'ஜாட்' இன நிலசுவன்தாரர்கள் மற்றும் வகுப்புவெறியர்கள்தான் இதற்கு காரணம் என்று அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.

ஆமினா (பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17, 18 மற்றும் 21 வயதுடைய இளம் பெண்களின் தாய். மாப்பிளைப் பார்த்து  நகை, நட்டுகளோடு தன்  குழந்தைகளின் மணக்கோலத்தை பார்க்கக் காத்திருந்தவர். "எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த .. நால்வர் .. என் மூன்று பெண்கள் உட்பட வன்முறையாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். 10-15 பேர் கொண்ட வெறிப்பிடித்த அந்த கும்பல் என் கண்முன்னாலேயே என்  பெண்களை கற்பழித்த அந்தக்கொடுமையை நான் காணாமல் செத்திருக்கக் கூடாதா?" அழுகையும், கேவலுமாய் உணர்வுகள் விம்மி துடிக்கின்றன.  "இதில் இருவரை குற்றுயிரும், குலையுயிருமாய் விடுவித்துவிட்டனர். இன்னும் இருவரது நிலை என்னவென்று இதுவரையும்  தெரியவில்லை!" - என்கிறார் அந்த அபலைப் பெண் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய் வேதனையோடு.

ஆமினாவின் குடும்பத்தில் மட்டும் நடந்த சம்பவமல்ல இது. 

இப்படி ஏராளமான அபலைப் பெண்கள் அவர்களது அண்டை அயலாராலேயே அவமானப்படுத்தப்பட்டார்கள். கற்பழித்துப் படுகொலை செய்யப்பட்டார்கள். துண்டு துண்டாய் நறுக்கி எரிக்கப்பட்டார்கள்.

சபீனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) 16 வயது இளம் பெண். அவளுக்கும் இந்த அநீதி அதே வன்முறை கும்பலால் இழைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மணி நேரம்.. பாதுகாப்பு படைகள் வரும்வரை அவள் அந்த வகுப்புவாதிகளிடம் சிக்கி நரக வேதனை அனுபவித்திருக்கிறார்.

'கஹாப்' பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜாட் இனத்து தலைவன் 'ஹரி கிருஷ்ணாவின்' மகன் 'ராஜேந்திரா'தான் இந்த கும்பலுக்குத் தலைமை வகித்தது என்றும் சபீனா கயவர்களை அடையாளம் காட்டுகிறார். அந்த கும்பலால் கற்பழிக்கப்படும் போது அவர்களின் வெறிப்பிடித்த அந்தக் கூச்சல் இன்னும் தன் காதில், "அழகு சுந்தரிகளை அனுபவிப்போம்! மற்றவர்களை கொன்றொழிப்போம்!" ஒலிக்க இரு கரங்களால் செவிகளை மூடிக் கொள்கிறார் அவர் பீதியுடன்.

செப். 8 - இல், 5-7 கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட மற்றொரு 25 வயது இளம் பெண் தன்னை இக்கொடுமைக்கு ஆளாக்கிய இருவரது  பெயர்களை தெளிவாக குறிப்பிடுகிறார். 'தாரியாவின்' மகன் 'அன்கிட்' மற்றும் 'இலாமந்தின்' மகன் 'சுபாஷ்தான்' அந்த கயவர்கள். இந்த கொடுமைக்கு முதல் காரணமான அஜீதையும் அவர் சுட்டிக் காட்ட மறக்கவில்லை. பாதுகாப்பான புகலிடம் தருகிறேன் என்று கூறிய அந்த நயவஞ்சகனின் பேச்சை நம்பி விலைமதிப்பற்ற தனது மானத்தை இழந்து போன கதை அது. அடைக்கலம் தருவதாய் வாக்களித்த கையோடு கலவரக்காரர்களுக்கு வீட்டையுமம் திறந்து விட்ட  மாபாதக செயல் அது.

வகுப்பு வெறியர்கள்.. வெறிநாய்களாய் விரட்ட.. உயிரைக் காத்துக் கொள்ள ஓடோடி காவல் நிலையத்தை தஞ்சமடைந்தனர் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், அவர்களிடம் வகுப்பு வெறி காக்கிசட்டைகள், "நாங்கள் எங்கள் மக்களைதான் (ஜாட் மற்றும் இந்துக்கள்) காப்போம்! முஸ்லிம்களை அல்ல!" என்று வெளிப்படையாக பிரகடனம் செய்ததை அவர்கள் மறக்கவில்லை.

இத்தகைய நூற்றுக் கணக்கான கண்ணீர் கதைகள் மேற்கு உத்திரப்பிரதேசத்தின் நிவாரண முகாம்களில் அகதிகளாய் இருக்கும் 1.25 லட்சம் மக்களிடமிருந்து நாவல் உருவத்தில் வெளிப்படுகின்றன.

தங்களை தாங்களேதான் காத்துக் கொள்ள வேண்டும் எந்த அரசாங்கத்தையும் இனி நம்பி பயனில்லை என்பதை இந்தியாவின் பெரும்பான்மை மாநிலத்தில் வாழும் சிறுபான்மையினர் புரிந்து கொண்ட துயரங்கள் அவை.

இந்நிலையில், 'காவ்லா' மற்றும் 'கண்டாலா' நிவாரண முகாம்களுக்கு ஆறுதல் சொல்ல சென்ற மாநில முதல்வர் 'அகிலேஷ் யாதவ்' கருப்புக் கொடி காட்டப்பட்டு கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். அவரது கையாலாகதனமான அரசு தங்களுக்கு பாதுகாப்பளிக்க தவறிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு காட்டியுள்ளார்கள்.

ஆதாரம்: 'டெய்லி பாஹ்ஸ்கர்'


1 comment:

  1. BJP IS NOT A POLITICAL PARTY IT IS A PARTY RUN BY RSS WHOSE AGENDA IS TO CREATE DIVISIONS AMONG INIDAN CITIZENS AND CAPTURE POWER.IT IS TO BE NOTICED FIRST THEY SAY MAKE MUSLIMS A SECOND GRADED CITIZENS BUT LATER OUR HINDU BROTHERS WILL REALISE THAT THEIR MAIN AGENDA IS TO GIVE POWER ONLY TO BRAHMINS AND MAKE OTHER HINDUS AS THIRD GRADED CTIZENS BE CAREFUL

    ReplyDelete