NewsBlog

Tuesday, August 6, 2013

உலகம் சுற்றும் பாமரன்: "இனி வலியில்லாமல் தொழலாம்..!"


“மூட்டு வலிக்காரர்கள் இனி வலியில்லாமல் தொழலாம்!” – என்கிறார் ஐம்பது வயதாகும் அத்னான் பியாரிசன். துருக்கியைப் பூர்விகமாகக் கொண்ட ஜெர்மன்வாசியான இவர் மற்றவரைப் போலவே முதுமை மூட்டு வலியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர். இந்த வேதனையிலிருந்து பிறந்தது ஒரு விடிவு.
ஆம்… இனி மூட்டு வலிக்காரர்கள் வலியில்லாமல் தரையில் நின்று, குனிந்து, சிரம்பணிந்து தொழலாம். இதற்கான பிரத்யேக தொழுகை விரிப்பை வடிவமைத்துள்ளார் அத்னான்.
தோற்றத்தில் சாதாரண தொழுகை விரிப்பைப் போலவே இருக்கிறது. தொழும் போது முக்கியமாக தரையில் உடல் எடையைத் தாங்கும் பாதம், முட்டி மற்றும் முன்னெற்றி ஆகிய இடங்களில் பிரத்யேகமான பஞ்சடைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஒரு வகை பிரத்யேகமான பஞ்சால் வடிவமைக்கப்படும் இந்த தொழுகை விரிப்பு ஒருகாலும் சேதமடைவதில்லை!” – என்று தெரிவிக்கும் அத்னான் அதன் கலவையை மட்டும் கேட்டுவிடாதீர்கள்! அது தொழில் ரகசியம்!” – என்கிறார் சிரித்துக் கொண்டே.
2009-இல், காப்புரிமைக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பிரத்யேக தொழுகை விரிப்பு துருக்கியின் மூன்று நகரங்களிலிருந்து தற்போது தயாரிக்கப்படுகிறது.
“ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் தொழுகை விரிப்புகளை நாங்கள் விற்பனை செய்கிறோம்!” – என்கிறார் 10 வயதிலேயே ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்துவிட்ட அத்னான்.
மூட்டு வலிக்கான இந்த தொழுகை விரிப்பை சிறிய பை வடிவில் மடித்து வைத்துக் கொள்ள முடியும்.இணைய தளம் வழியே பொதுவாக விற்கப்படும் இந்த பிரத்யேக தொழுகை விரிப்புக்கான நேரடி விற்பனை நிலையங்கள் ஜெர்மனி, துருக்கி, குவைத் மற்றும் துபாயில் உள்ளன.
39.50 யூரோ (ரூபாய் 3207.49) இன்னும் சில நாடுகளில் 52 டாலர் (ரூபாய் 3161.78) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த மூட்டு வலிக்கான தொழுகை விரிப்பு ஆடம்பரம் மற்றும் விளையாட்டுப் பொருட்களின் பட்டியலில் சிங்கபூர் மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


0 comments:

Post a Comment