NewsBlog

Wednesday, March 4, 2015

வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்


வடசென்னை அனல் மின் நிலையத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 

அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையில் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 1200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மூன்றாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 660 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக வாயலூர் உள்ளிட்ட பகுதிகளில் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அனல்மின் நிலையம் அமைக்கப்படுவதின் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் வாயலூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

0 comments:

Post a Comment