Pages - Menu

Pages - Menu

Menu - Pages

Monday, July 29, 2013

என் கேள்விக்கு என்ன பதில்? - 'இதுதான் பதில்!'


ஒரு முறை மாபெரும் மார்க்க அறிஞரும் இஸ்லாமிய இயக்கத் தலைவருமான மௌலானா ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.

அதே கூட்டத்தில் கலந்துகொள்ள முஸ்லிமல்லாத வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஒருவரும் வந்திருந்தார். மௌலானாவும் பேராசிரியரும் பேசிக்கொண்டிருந்தபோது, முகலாயர் மன்னர்கள் குறித்தும், அவர்களின் செயல்கள் குறித்தும்தங்களின் கருத்து என்ன என்று மௌலானாவிடம் கேட்டார் பேராசிரியர்.

முகலாய மன்னர்களுக்கு ஆதரவாக மௌலானா பேசுவார், அதை வைத்து அவரை மடக்கி விடலாம் என்று அந்தப் பேராசிரியர் திட்டமிட்டிருந்தார். மௌலானா அவர்களோ எந்தப் பதற்றமுமின்றி அமைதியாகப் பதில் கூறினார்:

“பேராசிரியர் அவர்களே..! நான் குர்ஆன்-ஹதீஸ் துறையில் ஆய்வுகள் செய்து பட்டம் பெற்றவனே தவிர வரலாற்றுத் துறை மாணவன் அல்லன். நீங்கள் வரலாற்றுத் துறை பேராசிரியராக இருக்கிறீர்கள். 



எந்தெந்த முஸ்லிம் மன்னர் என்னென்ன செய்தார் என்று நீங்கள் சொன்னால், அந்தச் செயல்களை இஸ்லாம் ஆதரிக்கிறதா இல்லையா என்பதை நான் சொல்வேன். அதன் மூலம் நீங்களே முகலாய மன்னர்கள் குறித்து ஒரு முடிவுக்கு வரலாம்.”

பேராசிரியர் வாயடைத்துப் போய்விட்டார்

அந்தப் பேராசிரியருக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் முஸ்லிம்களின் சில செயல்பாடுகள் குறித்து குதர்க்கமாகவும் குத்தலாகவும் வினாக்கள் எழுப்புபவர்களுக்கும் இதுதான் பதில்.
 
சகோ.சிராஜுல்  ஹஸன்
தகவல்: சிராஜுல் ஹஸன்

No comments:

Post a Comment